ஏப்ரல் 29, ஜம்மு (Jammu Kashmir News): ஜம்மு காஷ்மீரில் உள்ள சோனோமார்க் பகுதியில் இருந்து வாடகை கார் ஒன்றில் 9 பேர், கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள காங்கன் பகுதியை நோக்கி பயணம் செய்துள்ளனர். அப்போது, அவர்கள் ககன்கீர் எனும் பகுதியில் சென்றுக்கொண்டிருக்கும்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் உள்ள சிந்த் ஆற்றில் விழுந்து கவிழ்ந்தது. Markram Yorker Bowled By Pathirana:மார்க்ரமை கிளீன் போல்டாக்கிய பத்திரனா..! ஐதராபாத் அணி படுதோல்வி..!

இதனையடுத்து, இந்த விபத்து குறித்து அறிந்து வந்த மாநில பேரிடர் மீட்பு படையினர் (State Disaster Response Force) மற்றும் காவல்துறையினர் சேர்ந்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இதில், 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர், படுகாயத்துடன் 2 பேர் மீட்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

மேலும், காரில் பயணம் செய்த 3 பேரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் இதுவரை மீட்கப்படவில்லை. இந்த விபத்தில் காரில் இருந்து குதித்து தப்பிச் சென்ற கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர். இதுதொடர்பாக, உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியும் நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.