ஏப்ரல் 29, சென்னை (Sports News): ஐபிஎல் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற 46-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் (CSK Vs SRH) அணிகள் மோதின. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. Avadi Shocker: ஆவடியை அலறவிட்ட இரட்டைக்கொலை; வயோதிக தம்பதி கழுத்தறுத்து படுகொலை.. தலைநகரில் பரபரப்பு சம்பவம்.!

முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி இருபது ஓவர் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 212 ரன்களை குவித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக கேப்டன் ருத்ராஜ் 98 ரன்களும், மிட்செல் 52 ரன்களும் அடித்தனர். இதனையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது.

இந்நிலையில், 10.5 ஓவரில் பத்திரனா தனது அற்புதமான யார்க்கர் பந்தின் மூலம் பேட்ஸ்மேன் மார்க்கரமை கிளீன் போல்ட் ஆக்கினார். இதனையடுத்து, 85 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து ஐதராபாத் அணி மோசமான நிலைக்கு சென்றது. பின்னர், 18.5 ஓவர்களில் 134 ரன்கள் மட்டுமே அடித்து ஐதராபாத் அணி ஆல் அவுட் ஆகியது. இதன்மூலம் சென்னை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும், ஆட்டநாயகன் விருதை ருத்ராஜ் பெற்று சென்றார்.