UPI Payment | Central Govt Logo (Photo Credit: Wikipedia)

டிசம்பர் 18, புதுடெல்லி (New Delhi): தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் நம்மிடையே அறிமுகமான யுபிஐ பணப்பரிவர்த்தனை முறை (Unified Payments Interface UPI), டிஜிட்டல் உலகில் இந்தியா நுழைய பெரும் உதவி செய்தது. இன்றளவில் பெருநகரங்களில் உள்ள ரோட்டுக்கடை முதல், கிராமங்கள் வரை டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை ஊக்குவிக்கப்ட்டுள்ளது. அதுசார்ந்த விழிப்புணர்வும் மக்களிடையே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பணப்பரிவர்த்தனைகள்: இந்நிலையில், மத்திய அரசு நடப்பு ஆண்டில் ரூ.8,713 கோடி அளவிலான யுபிஐ பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த 2017 - 2018 ம் நிதியாண்டில் 92 கோடி அளவிலான யுபிஐ பணப்பரிவர்த்தனைகள் செய்யப்பட்டன. ஆனால், நடப்பு 2022 - 2023ம் நிதியாண்டில் 8,375 கோடி பணப்பரிவர்த்தனைகள் யுபிஐ வாயிலாக செய்யப்பட்டுள்ளன. இதன் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் 47% அதிகம் ஆகும். Women Gang Raped: 5 பேர் கும்பலால் இளம்பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம்., லிப்ட் கொடுப்பதாக நடித்து நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்.! 

பணப்பரிவர்த்தனை மதிப்பு: அதேபோல, கடந்த 2017 - 2018ம் நிதியாண்டில் ரூ.1 இலட்சம் கோடி என்ற அளவில் இருந்த பணப்பரிவர்த்தனை மதிப்பு, 2022 - 2023ம் நிதியாண்டில் ரூ.139 இலட்சம் கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. இதன் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் 168% ஆகும். நடப்பு நிதியாண்டில் டிசம்பர் 11ம் தேதி வரையில் மட்டும் 8,752 கோடி யுபிஐ பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன.