Sexual Harassment (Photo Credit: Pixabay)

டிசம்பர் 18, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத் (Secunderabad) பகுதியில் இருந்து லாலாபேட்டை நோக்கி பயணிக்க, இளம்பெண் ஒருவர் கடந்த டிசம்பர் 07ம் தேதி காத்திருந்துள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த இளைஞர் ஒருவர், பெண்ணிடம் பேசி விபரம் கேட்டுள்ளார். பெண்மணி பேருந்துக்காக காத்திருப்பது குறித்து கூறியுள்ளார்.

லிப்ட் கொடுப்பதாக நடித்து கொடூரம்: இதனையடுத்து, பெண்ணுக்கு தான் உதவுதாக முன்வந்த இளைஞர், அவரை லாலாபேட்டைக்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளார். பெண்மணியும் நம்பி இளைஞருடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளார். இருசக்கர வாகனத்தில் பெண்ணை அழைத்து சென்றவர், அங்குள்ள பிரசாந்த் நகர் பகுதியில் இருக்கும் கைவிடப்பட்ட இரயில்வே குடியிருப்புக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

முதலில் இருவர்: இதனால் பதறிப்போன பெண்மணி செய்வதறியாது திகைத்த நிலையில், இளைஞர் தனது நண்பர் ஒருவரையும் அங்கு முன்னதாகவே வரவழைத்து இருக்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து பெண்ணை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கயவர்கள் தங்களின் கொடூரத்தை நிகழ்த்திவிட்டு, பின் 3 பேரை வரவழைத்துள்ளனர். Salaar Part 1 Ceasefire Trailer: ஆக்சனில் மிரட்டும் பிரபாஸ்.. சலார் படத்தின் புதிய டிரைலர் இதோ.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த படக்குழு.! 

ஐவராக சேர்ந்து கொடுமை: ஐவராக சேர்ந்து மீண்டும் பெண்ணை வலுக்கட்டாபயப்படுத்தி கூட்டுப்பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய கும்பல், அங்கிருந்து தப்பி சென்றது. ஒருவர் பெண்ணை அழைத்த இடத்திற்கே கொண்டு சென்று விட்டுவிட்டு தப்பிச்சென்றார். பாதிக்கப்பட்ட பெண்மணி சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதிரடி காண்பித்த காவல்துறை: புகாரை ஏற்ற காவல் துறையினர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண் கொடுத்த விபரங்களின் பேரில், அங்கிருந்த சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளின் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இறுதியில், விசாரணைக்கு பின்னர் காவல் துறையினர் பர்னா யேசு என்ற முக்கிய குற்றவாளி மற்றும் அவரின் நண்பர்கள் குழு இக்குற்றத்தை அரங்கேற்றியதை உறுதி செய்தனர்.

ஐவரும் கைது: பர்னா யேசுவை முதலில் கைது செய்த அதிகாரிகள் கொடூரனிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து, அவனின் நண்பர்கள் சீதா மது யாதவ், பிரசாந்த் குமார், தருண் குமார், கே.ரோஹித் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் ஐவரும் தற்போது காவல் துறையினரால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.