Govt Raises Interest Rate on Recurring Deposit: 5 ஆண்டு வைப்புத்தொகை வட்டி விகிதம் 6.7 ஆக உயர்வு - அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு..!

கடந்த ஜூன் மாதம் ஜூலை - செப்டம்பர் காலாண்டுகளில் தேர்வு செய்யப்பட்ட சிறுசேமிப்பு திட்டத்திற்கு வட்டி விகிதம் 0.3% உயர்த்தப்பட்டது.

Govt of India (Photo Credit: Wikipedia)

செப்டம்பர் 29, புதுடெல்லி (New Delhi): மத்திய அரசு டிசம்பர் காலாண்டில், 5 ஆண்டுகளுக்கான தொடர் வைப்புத்தொகை வட்டி விகிதத்தினை உயர்த்தி அறிவித்து இருக்கிறது. அதேபோல, பிற சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் அப்படியே தக்கவைக்கப்பட்டுள்ளது.

ஐந்தாண்டுகளுக்கான வைப்புத்தொகை கணக்குகளுக்கு 20 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் ஜூலை - செப்டம்பர் காலந்நடுகளில் தேர்வு செய்யப்பட்ட சிறுசேமிப்பு திட்டத்திற்கு வட்டி விகிதம் 0.3% உயர்த்தப்பட்டது. Balochistan Bomb Blast: அடுத்தடுத்து 2 தற்கொலைப்படை தாக்குதல்; குண்டு வெடித்து 52 பேர் பரிதாப பலி., 50 பேர் படுகாயம்.! 

அதனைப்போல, ஐந்தாண்டு தொடர் வைப்புத்தொகை கணக்குகளுக்கு 0.3% அதிகரிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் 0.3% வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டு இருப்பது, ஐந்தாண்டு தொடர் வைப்புத்தொகை கணக்கு வைத்திருப்போருக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.