நவம்பர் 23, சென்னை (Technology News): கொரோனா வைரஸ் பரவலுக்கு பின்னர் வீட்டிலிருந்து பணியாற்றும் நடைமுறை என்பது மென்பொருள் தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக ஏஐ பயன்பாடு அறிமுகம் மற்றும் அதனை பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுத்தியது காரணமாக பல லட்சக்கணக்கான வேலை இழப்புகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், கடந்த மாதம் மிகப்பெரிய இகாமர்ஸ் நிறுவனமான அமேசான் வரும் அடுத்தடுத்த நிதியாண்டுகளில் பல ஆயிரம் பணியாளர்களை நீக்க உள்ளதாகவும், சாத்தியமான இடங்களில் ஏஐ தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் அறிவித்து அதிர்ச்சி கொடுத்தது. Moto G57 Power: அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் களமிறங்கும் மோட்டோ G57 பவர்.. முழு விபரம் இதோ.!
மென்பொருள் பொறியாளர்கள் பாதிப்பு:
2021 ஆம் ஆண்டை பொறுத்தவரையில் மொத்தமாக 231 தொழில்நுட்ப நிறுவனங்கள் சுமார் 1,13,000 பணியாளர்களை நீக்கி இருக்கிறது. அமேசானின் 31 ஆண்டு கால வரலாற்றில் பணி நீக்க நடவடிக்கை தற்போது மிகப்பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே அமேசான் 14,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்த நிலையில், மென்பொருள் பொறியாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இந்த 14,000 பேரில் 10ல் 4 பேர் பொறியாளர்கள் ஆவார்கள்.
ஏஐ தொழில்நுட்பத்தால் பணிநீக்கம்:
மென்பொருள் மேம்பாட்டு பிரிவில் பணியாற்றி வந்த பலரும் தங்களது வேலையை இழந்துள்ளனர். இது தவிர்த்து கேமிங், விளம்பரங்கள், பரிசோதனை துறை ஊழியர்கள் என பலரும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர், ஆனால் இந்த விஷயங்களுக்கு செயற்கை நுண்ணறிவு காரணம் இல்லை. பொருளாதார ரீதியிலான அணுகுமுறையே காரணம் என பல நிறுவனங்களும் விளக்கம் அளித்து வருகின்றன.