IND Vs SA Test Series 2025 (Photo Credit: @BCCI X)

நவம்பர் 22, கவுகாத்தி (Cricket News): இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா தேசிய கிரிக்கெட் அணி Vs தென்னாபிரிக்கா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs South Africa National Cricket Team) மோதும் முதல் டெஸ்ட் தொடரில், தென் ஆப்பிரிக்க அணி அசத்தல் வெற்றியடைந்தது. அதனைத்தொடர்ந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 22 இன்று முதல் அசாம் மாநிலம் கவுகாத்தி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. IND vs SA 2nd Test: இந்தியா Vs தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி 2வது டெஸ்ட் எப்போது? வெற்றி யாருக்கு? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.! 

தென்னாபிரிக்க அணி ரன்கள் குவிப்பு:

இதனைத்தொடர்ந்து, இந்திய அணி பந்து வீசியது. இரண்டாவது டெஸ்ட் தொடரின் முதல் நாள் ஆட்டமான இன்று, தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த அணியின் சார்பில் விளையாடியவர்கள் 81.5 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் குவித்துள்ளனர். இன்று விளையாடிய அணி வீரர்களை பொறுத்தவரையில் எய்டன் மார்க்கம் 81 பந்துகளில் 38 ரன்களும், ரயான் 82 பந்துகளில் 35 ரன்களும் அடித்திருந்தனர். திருஷ்டன் 112 பந்துகளில் 49 ரன்னும், பவுமா 92 பந்துகளில் 41 ரன்னும், டோனி 59 பந்துகளில் 28 ரன்னும், முல்டர் 18 பந்துகளில் 13 ரன் எடுத்திருந்தனர். சேனுரான் முத்துசாமி 45 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார். தொடர்ந்து, நாளை ஆட்டத்திலும் அணி இதே போன்ற விக்கெட்டை தக்கவைத்து ரன்களை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் ஆப்பிரிக்க அணி நின்று விளையாடி ஸ்கோரை உயர்த்துகின்ற நிலையில், இந்திய அணி என்ன செய்யப் போகிறது? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. குல்தீப் யாதவ் இன்று அதிகபட்சமாக 3 விக்கெட்டை கைப்பற்றி இருந்தார்.

விக்கெட் வீழ்த்தி அசத்திய பண்ட் & சிராஜ்:

ஜெய்ஷ்வாலின் அசத்தல் கேட்ச்: