Gujarat Shocker: ஓரினசேர்க்கை உறவில் இருந்து விலக நினைத்த நண்பர் கொலை; இளைஞர் கைது.. விசாரணையில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.!

கடந்த ஓராண்டுகளாக ஓரினசேர்கையில் உல்லாசமாக இருந்து வந்த இளைஞர்களில், ஒருவர் உறவில் இருந்து விடுபட முயற்சித்தால் இறுதியில் கொலை செய்யப்பட்டார்.

Gujarat Shocker: ஓரினசேர்க்கை உறவில் இருந்து விலக நினைத்த நண்பர் கொலை; இளைஞர் கைது.. விசாரணையில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.!
Crime File Picture (Photo Credit: PIxabay)

அக்டோபர் 27, அகமதாபாத் (Gujarat News): குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், சந்த் கேரா பகுதியில் வசித்து வருபவர் கமலேஷ் ராவத். இவரின் நண்பர் ஜெயேஷ் பரமர். இவர் தனது சகோதரி ஜயோஸ்னா ஷாவின் வீட்டில் வசித்து வருகிறார்.

கடந்த அக்டோபர் 20ஆம் தேதி பர்மர் தனது அக்கா மகனான பத்து வயது சிறுவனுடன் இருசக்கர வாகனத்தில் கர்ப் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு சிறுவனை இறக்கிவிட்டு பர்மர் தனியாக சென்ற நிலையில், அவர் மாயமாகினார்.

பின் தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து வீட்டிற்கு வந்த சிறுவன், மாமா எங்கு சென்றார் என்று தெரியவில்லை. தன்னை இறக்கி விட்டு வருவதாக கூறி சென்றவர் மீண்டும் தற்போது வரை வரவில்லை என கூறியுள்ளார்.

இதனையடுத்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை ஏற்ற அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், பர்மரின் சடலம் கொலை செய்யப்பட்டவாறு மீட்கப்பட்டது. SUV Hit Cop: காவலரை இடித்து தள்ளி அதிவேகத்தில் பாய்ந்த கார்; பதைபதைக்க வைக்கும் சம்பவம்.! 

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பர்மரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து நடந்த விசாரணையில், பரமர் மற்றும் அவரின் நண்பர் கமலேஷ் ராவத் ஆகியோர் ஓரினச்சேர்க்கை ஈடுபாடு கொண்டவர்கள் என தெரியவந்துள்ளது.

இருவரும் ஓரினச்சேர்க்கையில் கடந்த ஒரு ஆண்டுகளாக உல்லாசமாக இருந்த நிலையில், தற்போது ராவத் இவ்வுறவில் இருந்து விலக நினைத்துள்ளார். இதில் விருப்பம் இல்லாத பரமர் - ராவத் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று அங்குள்ள விராஜ் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு அருகே இருவரும் சந்தித்து பேசிக்கொண்டு இருந்தபோது வாக்குவாதம் எழுந்த நிலையில், கமலேஷ் பர்மரை அங்கிருந்த கல்லால் தாக்கி கொலை செய்து சடலத்தை அங்கேயே விட்டுவிட்டு வந்துள்ளார். விசாரணைக்கு பின் உண்மையை அறிந்த காவல்துறையினர், நேற்று ராவத்தை கைது செய்தனர்.

(The above story first appeared on LatestLY on Oct 27, 2023 07:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).