Father Killed His Son: 10 வயது மகனுக்கு விஷம் கொடுத்து, கழுத்தை நெரித்து கொடூர கொலை; போக்குவரத்து காவலர் தலைமறைவு..!
குஜராத்தில் 10 வயது மகனுக்கு அவரது தந்தை விஷம் கொடுத்து, கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 03, அகமதாபாத் (Gujarat News): குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சாரி நகர் பகுதியை சேர்ந்த சஞ்சய் பரியா என்பவர், போக்குவரத்து காவலராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி வன்ஷ் (வயது 10) என்ற மகன் இருந்தார். இந்நிலையில், கடந்த மே 31-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று சஞ்சய் பணிக்கு செல்லும்போது, தனது மகன் வன்ஷை உடன் கூட்டிச் சென்றுள்ளார். பின்னர், இருவரும் வீடு திரும்பவில்லை. மேலும், அவருடைய செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆனது. Father Threw His Son Into The Lake: 3 வயது மகனை ஏரியில் வீசிவிட்டு தப்பிச் சென்ற கொடூர தந்தை..! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
இதனையடுத்து, 2 நாட்கள் கழித்து நேற்றைய தினம் தனது மனைவிக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, வன்ஷை தான் கொலை செய்துவிட்டதாகவும், உடல் பணியிடத்தில் உள்ள அறையில் இருப்பதாகவும் தெரிவித்துவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார். பின்னர், தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் சஞ்சய் பணிபுரிந்து வந்த போக்குவரத்து நிழற்குடைக்கு சென்று பார்த்தனர்.
அப்போது, அந்த சிறுவன் வாயில் நுரை தள்ளியநிலையில்,கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளான். மேலும், அங்கு விஷ மருந்து (Poison Death) பாட்டில்கள் கிடந்துள்ளன. இதனையடுத்து, சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். இதுதொடர்பாக, சஞ்சய் பரியா மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Jun 03, 2024 12:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

