Porur Lake File Pic (Photo Credit: @JuniorVikatan X)

ஜூன் 03, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள தாம்பரம்-மதுரவாயல் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில், 3 வயது சிறுவனுடன் வந்த ஒருவர், போரூர் ஏரி (Lake) மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தினார். பின்னர், திடீரென அந்த சிறுவனை ஏரியில் தூக்கி வீசி எறிந்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். NAM Vs OMA Highlights: விறுவிறுப்பான சூப்பர் ஓவரில் நமீபியா அணி வெற்றி..! ஓமன் அணி ஏமாற்றம்..!

இதனை ஏரியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த சிலர் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே, இவர்கள் ஏரியில் குதித்து தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த சிறுவனை உயிருடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதனையடுத்து, அந்த சிறுவனை போரூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர், காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சென்னை தலைமை செயலக காலனியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர், தனது 3 வயது மகன் தர்சனை ஏரியில் வீசியுள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில், மோகன்ராஜ் தனது மனைவி பிரியாவுடன் ஏற்பட்ட தகராறில் அவரை வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டு, தனது மகனை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். அப்போது, அவர் தனது 3 வயது மகனை திடீரென ஏரியில் வீசி சென்றுள்ளது கண்டறியப்பட்டது. இதுகுறித்து, அயனாவரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், சிறுவனின் தாயாருடன் போரூர் காவல்நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். அந்த சிறுவன் அவரது தாயுடன் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார். மகனை ஏரியில் வீசிவிட்டு தப்பிச் சென்ற சிறுவனின் தந்தை மோகன்ராஜை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.