Spy Camera Alert: உங்களின் அறையில் ரகசிய கேமரா பொறுத்தப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிவது எப்படி?.. உஷார் பெண்களே..!

விடுதியில் உள்ள கழிவறை, குளியலறை என்று ஒவ்வொரு இடத்திலும் அந்தரங்க காட்சிகளை படம்பிடிக்க ரகசிய கேமிராக்கள் வைப்பது இன்றளவில் அதிகமாக நடந்து வருகிறது.

டிசம்பர், 9: இன்றுள்ள தொழில்நுட்ப யுகத்தில் நாம் வேலைக்காகவும், சுற்றுலாக்காகவும் என பல இடங்களுக்கு சென்று வருகிறோம். இதில், திருமணம் முடிந்து ஜோடியாகவும், காதலருடன் தனிமையில் இருக்கவும் என விடுதிக்கும் செல்கிறோம். சில நேரங்களில் அவர்கள் பணிக்காக தங்கியிருக்கும் விடுதியில் உள்ள கழிவறை, குளியலறை என்று ஒவ்வொரு இடத்திலும் அந்தரங்க காட்சிகளை படம்பிடிக்க ரகசிய கேமிராக்கள் (Spy Camera) வைப்பது இன்றளவில் அதிகமாக நடந்து வருகிறது.

இவைகள் கதவு, சுவரின் ஒருபகுதி, மேற்கூரை, கடிகாரம், மின்விளக்கு, டிஷு பேப்பர், பூக்குவளை, பூச்சென்று போன்று பல இடங்களில் சிறிய அளவிலான துளையில் கேமரா வைத்து, பேட்டரி மூலமாக இணைப்பை கொடுத்து கண்காணிக்கும் வகையில் அமைப்பை ஏற்படுத்தியிருப்பார்கள். நாம் முதலில் ஒரு இடத்திற்கு சென்று ரகசிய கேமராவை கண்காணிக்க கண்ணாடியை பார்க்க வேண்டும். Smallest Countries World: உலகளவில் மிகச்சிறிய நாடுகள் எது தெரியுமா?.. தீவுகள் முதல் மலைப்பிரதேசங்கள் வரை அமைந்துள்ள சிறிய நாடுகள்.! 

Spy Camera

அதன் நேர்த்தியான வடிவமைப்புடன் கேமரா இருந்தால் அது கண்டறியப்படும். ஏனெனில் கேமரா லென்ஸ் நமக்கு அதனை பிரதிபலித்து காண்பித்துக்கொடுக்கும். அதனைப்போல, அறையின் கண்ணாடிக்கும் - நாம் விரலை வைத்து அழுத்தி பார்த்தால் இரண்டுக்கும் இடைவெளி இருந்தால் அங்கு போலியான கண்ணாடி உள்ளது என்பது அர்த்தம்.

விடுதி அறைகளில் ரகசிய கேமரா உள்ளதா? என்பதனை கண்டறிய முதலில் அறைக்குள் வெளிச்சம் வராமல் அதனை அடைக்க வேண்டும். பின்னர், செல்போனில் உள்ள கேமராவை ஆன் செய்து சுவர் மற்றும் விளம்பரங்கள் போன்றவற்றை புகைப்படம் எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இருட்டில் சிறிதளவை வைக்கப்படும் ஹிட்டன் கேமரா கண்டறியப்படலாம்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 9,2022 09:16 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).