Online Game Audit: செல்போனுக்கு அடிமையாகும் சிறார்களுக்கு மூர்க்கத்தனமான குணம்.. அதிர்ச்சியை தரும் பகீர் தகவல்.. பெற்றோர்களே கவனியுங்கள்.!
அதிகரித்துவிட்ட தொழில்நுட்ப உலகில் உடலுழைப்பு விளையாட்டுகளை விட, இணையதள விளையாட்டுகள் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரை அதிகளவில் ஆட்கொண்டுவிட்டது.
டிசம்பர், 11: அதிகரித்துவிட்ட தொழில்நுட்ப உலகில் (Technology World) உடலுழைப்பு விளையாட்டுகளை விட, இணையதள விளையாட்டுகள் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரை அதிகளவில் ஆட்கொண்டுவிட்டது. எந்த நேரமும் செல்போன்களை கையில் வைத்து கொண்டு அவனை சூடு, அதோ வருகிறான் (Mobile Game Audit) என்று அவர்களின் பொன்னான நேரங்கள் கையடக்க செல்போனுக்குள் வீணடிக்கப்பட்டு வருகிறது.
கைகளில் செல்போனை வைத்துக்கொண்டு கேமை தொடர்ந்து விளையாடி பின்னாட்களில் தனிமை, மனசோர்வு போன்ற விஷயங்களில் எளிதில் அவர்கள் சிக்கிவிடுகின்றனர். மேலும், கேம்களை விளையாடும்போது அவர்களுக்குள் ஏற்படும் ஆக்ரோஷம், உண்மையான வாழ்க்கையில் அப்படியே பிரதிபலித்து மூர்க்கத்தனமான குணத்தையும் ஏற்படுத்துகிறது.
இவ்வாறான நிலைகள் தொடர்ந்து வருவதால் ஒருகட்டத்திற்கு மேல் மனசோர்வு, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். அதேபோல, பிற்காலத்தில் தனக்கு பிடிக்காத நபர்கள் குறித்து தவறானவற்றை கூறுவது, ஆபாச படங்கள் வெளியிடுதல், தனிநபரை புண்படுத்தும் வகையிலான கேலி-கிண்டல், மிரட்டல் போன்றவையும் ஏற்படும். DecMovies2022: டிசம்பர் 2022ல் களமிறங்கும் அட்டகாசமான 6 பாலிவுட் திரைப்படங்கள் என்னென்ன?.. விஜய் சேதுபதியின் படமும் ரிலீஸ்.!
இதனை சைபர் புள்ளியிங் என்று கூறுகிறார்கள். மேற்கத்திய நாடுகளில் 40% இளைஞர்கள் சைபர் புள்ளியிங் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். கேமில் தொடங்கும் இளைஞர்களுக்கான பாதிப்பு பாலியல் நாட்டம், ஆபாச தங்களுக்கு அறிமுகம் என அடுத்தடுத்த பேரழிவை நோக்கி அவர்களின் வாழ்க்கையை நகர்த்துகிறது.
இரவு முதல் அதிகாலை வரை என பெரும்பாலும் கணினி, மடிக்கணினி, மொபைல் போன்றவற்றை தொடர்ந்து உபயோகம் செய்வது அவர்களின் வாடிக்கையாக மாறினால், அதனை யாரேனும் குறுக்கிட்டால் எரிச்சல் கொள்வது என செயல்பாடுகளும் மாறுகின்றன. இவற்றை குறைக்க அவர்களுக்கு இணையத்தை விட நிஜத்தில் மேற்கொள்ளும் விளையாட்டின் முக்கியத்துவத்தை நீங்களும் உடன் சேர்ந்து விளையாடி அல்லது ஊக்கப்படுத்தி கையாள வேண்டும்.
(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 11, 2022 04:59 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)