Man Helps His Wife To Marry Her Boyfriend: மனைவியை காதலனுடன் சேர்த்து வைத்த கணவர்.. ஊரார் முன்னிலையில் திருமணம்..!

பீகாரில் கணவர் தனது மனைவியை அவரது காதலனுடன் திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Man Helps His Wife To Marry Her Boyfriend: மனைவியை காதலனுடன் சேர்த்து வைத்த கணவர்.. ஊரார் முன்னிலையில் திருமணம்..!
Marriage (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 05, பாட்னா (Bihar News): பீகார் மாநிலம், ராம்நகர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் குமார் (வயது 26). இவருக்கு திருமணமாகி 2 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இவரது மனைவியை காண ஒரு நபர் அடிக்கடி அவரது வீட்டுக்கு வந்துள்ளார். இதனையறிந்த ராஜேஷ், ஒருநாள் அந்த நபரை பிடித்து விசாரித்துள்ளார். அப்போது, சாந்தன் என்ற அந்த வாலிபரும் ராஜேஷின் மனைவியும் சிறுவயதில் இருந்தே ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளது தெரியவந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ராஜேஷ், தனது மனைவிக்கும் அவரின் காதலனுக்கும் (Wife's Lover) ஊரார் முன்னிலையில் திருமணம் (Marriage) செய்து வைக்க முடிவெடுத்தார். Man Kills Girlfriend: உண்மை காதலுக்கு ஏங்கிய 20 வயது இளம் காதலி துண்டு துண்டாக வெட்டி கொடூர கொலை; காதலனின் கொலை நடுங்கவைக்கும் செயல்.!

இதனையடுத்து, கிராம மக்கள் முன்னிலையில் உள்ளூர் கோவிலில் அவர்களுக்கு திருமணம் செய்துவைத்தார். இதுகுறித்து அவரது மனைவி கூறுகையில், 'நான் என் முன்னாள் கணவருக்கு மிகவும் நன்றியுள்ளவராக இருப்பேன். தற்போது, தான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார். மேலும், ராஜேஷ் தன் 2 வயது குழந்தையை தானே இனி கவனித்து கொள்வதாக தெரிவித்தார்.

இதுதொடர்பாக ராஜேஷ் தெரிவிக்கையில், 'அவர்கள் இருவரும் உண்மையாகவே ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். அடிக்கடி பேசிக்கொண்டிருந்துள்ளனர். அதனால்தான் அவர்களை சேர்த்து வைக்க நான் முடிவுசெய்தேன். அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க நான் இவ்வாறு முடிவெடுத்தேன்' எனக் கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Aug 05, 2024 07:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).