Man Kills Girlfriend: உண்மை காதலுக்கு ஏங்கிய 20 வயது இளம் காதலி துண்டு துண்டாக வெட்டி கொடூர கொலை; காதலனின் கொலை நடுங்கவைக்கும் செயல்.!

உத்தரப்பிரதேசத்தில் காதலன் காதலியை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Man Kills Girlfriend: உண்மை காதலுக்கு ஏங்கிய 20 வயது இளம் காதலி துண்டு துண்டாக வெட்டி கொடூர கொலை; காதலனின் கொலை நடுங்கவைக்கும் செயல்.!
Murder Blood (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 05, பஹ்ரைச் (Uttar Pradesh News): உத்தரப்பிரதேச மாநிலத்தின் பஹ்ரைச் பகுதியை சேர்ந்தவர் ஷிபா. இவருக்கு வயது 20. இவர் முஸ்லிம் மதத்தினை சேர்ந்தவர். இவரும் இந்து மதத்தினை சேர்ந்த அருண் என்பவரும் உயிருக்கு உயிராய் காதலித்து வந்துள்ளனர். பின்னர் இருவரின் காதலும் அவரவர் வீட்டில் தெரிய வர, மதத்தின் காரணமாக அவர்களின் காதலினை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அருண் தாம் பிரிந்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்துள்ளார். ஆனால் ஷிபாவோ அருணிற்காக தன் குடும்பத்தையும் மதத்தினையும் விட்டு வெளி வர தயாராக இருந்தார். Woman Jumps Off 3rd Floor: கணவருடன் ஏற்பட்ட தகராறு.. மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட மனைவி.. வைரலாகும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!

அருணிடம் தனியாக ஓடி சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்டுள்ளார். அவரும் ஷீபாவை தனியாக வரக் கூறியுள்ளார். தனியாக வந்த ஷிபாவை அருணம் அவருடைய நம்பர் குல்தீபீபும் இணைந்து துடிக்க துடிக்க கொலை செய்துள்ளனர். கொலை செய்த உடன் ஷீபாவின் தலை, கை, விரல் என அனைத்தினையும் தனியாக வெட்டியுள்ளனர். அப்போதுதான் யாரும் அவளை அடையாளம் காண முடியாது என்று இவ்வாறு செய்துள்ளனர். பின்னர் அவளின் ஆடைகள் அனைத்தையும் நீக்கிவிட்டு அவளை ஒரு ஓடையில் தூக்கி எறிந்து விட்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், அப்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Aug 05, 2024 05:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).