ஜனவரி 02, குருகிராம் (Haryana News): ஹரியானா மாநிலம், குருகிராமில் (Gurugram) பரபரப்பு சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. இங்கு செக்டார்-5 பகுதியில் பெண் ஒருவர் மொட்டை மாடியில் இருந்து தள்ளிவிடப்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து பெண்ணின் சகோதரர் தாரேஷ் விஜயரன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், கடந்த டிசம்பர் 30ஆம் தேதி, என் சகோதரி ரிது என்னிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அவர் அழுது கொண்டே தனது கணவர் ரோஹித், மாமியார் காந்தா மற்றும் மாமனார் ராஜ்பீர் ஆகியோர் தன்னை அடிப்பதாக அவர் என்னிடம் கூறினார். Hidden Camera Scandal: பெண்கள் விடுதி குளியலறையில் ரகசிய கேமரா.. 300 வீடியோக்கள்? விடிய விடிய நடந்த போராட்டம்..!
காவல்துறையினர் தீவிர விசாரணை:
பின்னர், ரிது மொட்டை மாடியில் இருந்து குதித்து இறந்ததாக தகவல் கிடைத்தது. ஆனால், என் சகோதரி ரிது 4வது மாடியில் இருந்து தள்ளப்பட்டார். அதனால் தான் அவர் இறந்துவிட்டார் என்று அவரது சகோதரர் கூறினார். புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, நேற்று முன்தினம் (டிசம்பர் 31) ரோஹித் மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று அவரது தாயார் கைது செய்யப்பட்டார். காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.