CMR Engineering College Hidden Camera Scandal (Photo Credit: @InformedAlerts X)

ஜனவரி 02, ஐதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் புறநகர் பகுதியான மேட்சல் (Medchal) மாவட்டத்தில் கண்டலகோயாவில் உள்ள சிஎம்ஆர் பொறியியல் கல்லூரியில் (CMR Engineering College) நேற்று (ஜனவரி 01) இரவு பெரும் பதற்றம் ஏற்பட்டது. அங்குள்ள கல்லூரி பெண்கள் விடுதி குளியலறையில் கேமராக்கள் பொருத்தப்பட்டு ரகசியமாக வீடியோ எடுப்பது தெரியவந்துள்ளது. விடுதியில் பணிபுரியும் சமையல் ஊழியர்கள் மீது மாணவிகள் சந்தேகமடைந்து, வீடியோ எடுத்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். Heart Wrenching Crime: தாய், 4 தங்கைகள் பிளேடால் அறுத்துக்கொலை.. 24 வயது மகன் வெறிச்செயல்.. புத்தாண்டு விடிந்ததும் சோகம்..!

பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா:

மேலும், இந்த வீடியோ காட்சிகள் குறித்து கல்லூரி நிர்வாகம் உடனடியாக பதிலளிக்க வேண்டும் எனவும் அவர்கள் ஆக்ரோஷத்துடன் கத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், மாணவிகளை சமாதானப்படுத்த முயன்றனர். மேலும், சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்தார். ஆனால், இந்த விவகாரத்தில் குழப்பமான விஷயங்கள் வெளியாகி வருகின்றன. விடுதி ஊழியர்களிடம் இருந்த 12 செல்போன்களை கைப்பற்றியுள்ளனர். மேலும், 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

300 வீடியோக்கள்:

ரகசிய கேமரா (Hidden Camera) மூலம், குளியலறையில் சுமார் 300 வீடியோக்களை பதிவு செய்ததாக மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் கசிந்தால் தங்களுக்கு என்ன நடக்கும் என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் பதிலளிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சரும், மேட்சல் முன்னாள் எம்எல்ஏவுமான மல்லாரெட்டியே பொறுப்பேற்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து, மாணவர் சங்க தலைவர்கள் நேற்று இரவு அங்கு வந்தனர். அவர்களை ஊழியர்கள் உள்ளே அனுமதிக்காததால், வாயில் முன்பு கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆத்திரத்தில் அங்குள்ள பாதுகாப்பு அறையின் கண்ணாடிகளை உடைத்தனர். காவல்துறையினர் அங்கு வந்து அமைப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், விசாரணை நடத்தி வருவதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்: