Shocking Video: நாயின் வாலில் பட்டாசு வைத்து கொடுமை; தீபாவளி கொண்டாட்டத்தில் கேடு செய்த இளைஞன்..!
வளர்ப்பு நாயின் வாலில் பட்டாசை பற்றவைத்த இளைஞனின் செயல் கடும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது. கொண்டாட்டத்தின் பேரில் நடக்கும் கொடுமைகள் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு விதமாக தொடருகிறது.
நவம்பர் 01, மும்பை (Mumbai): உலகெங்கும் உள்ள இந்துக்களால் வெகுவிமர்சையாக சிறப்பிக்கப்பட்ட தீபாவளி 2024 (Diwali 2024) பண்டிகை, தமிழ்நாட்டில் நேற்று கொண்டாடப்பட்டது. நவம்பர் 1ம் தேதியான இன்று வடமாநிலங்களில் தீபாவளி (Diwali Celebrations Video) சிறப்பிக்கப்படுகிறது. தலைநகர் சென்னையில் பட்டாசு வெடித்து 304 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கோலாகலமான கொண்டாட்டத்தை மக்கள் அனைவரும் சொந்த ஊர்களில் மகிழ்வாக சிறப்பித்து இருந்தனர். ஒருசில கோளாறு பிடித்த இளைஞர்கள், வாயில்லாத ஜீவனை பட்டாசுகளை வதைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். Sexual Harassment: 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; அதிமுக பிரமுகர் போக்ஸோவில் கைது.!
நாயின் வாலில் பட்டாசு:
இதனிடையே, வடமாநிலத்தில் எடுக்கப்பட்டதாக தெரியவரும் வீடியோ ஒன்றில், இளைஞர் நாயின் வாலில் பொறிவனத்தை வைத்து பதறவைத்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. நாயின் வாலில் பொறிவனத்தை வைத்தவர், அதனை பற்றவைத்ததும் நாய் பயத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளவர்கள், இளைஞருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளார். இந்த விடீயோவின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்க விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பான பீட்டாவும், இதுகுறித்து விபரம் தெரிந்தோர் தகவலை பகிர கேட்டுக்கொண்டுள்ளது.
நெஞ்சை பதறவைக்கும் வீடியோ இங்கே:
ऐसे Hहरामियों पर सख्त से सख्त कार्रवाई की जाए
इस बेजुबान प्राणी ने इस hहारामी का क्या बिगाड़ा था ??
अगर इसके भी पिछवाड़े में ऐसे ही बम लगा दिया जाए तो उसको तब पता चलेगा उसका दर्द
अगर यह म****** कहीं पर भी मिले इसे पुलिस के हवाले करो !!
RT करो तब तक ...जब तक यह पकड़ा ना जाए 🙏 pic.twitter.com/wDW9j1Jnz4
— Adv Jony Ambedkarwadi 🇮🇳 (@TheJonyVerma) October 30, 2024
இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற விபரங்கள், குற்றம் இழைத்தவர் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
(The above story first appeared on LatestLY on Aug 18, 5867 05:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

