ஜூலை 18, பால்நாடு (Andhra Pradesh News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பால்நாடு மாவட்டம், வினுகொண்டா பகுதியில் நடுரோட்டில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். நடுரோட்டில் நடந்த சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை பதிவு செய்தது. ஆந்திராவில் பதற்றமான இடமாக கருதப்படும் பல்நாடு பகுதியில், தேர்தல் காரணமாக பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு குற்றங்கள் குறைந்து இருந்தது. அங்குள்ள முண்ட்லமூர் பேருந்து நிலைய பிரதானமான சாலையில், இரவு 7 மணியளவில் நடந்து சென்றுகொண்டு இருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர் ஷேக் அப்துல் ரஷீத் என்பவரை, கிலானி என்பவர் தாக்கி இருக்கிறார். கிலானி தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவாளர் என கூறப்படும் நிலையில், அதற்கு அக்கட்சி தலைமை மறுப்பு தெரிவித்துள்ளது. Joe Biden has Confirmed Coronavirus: மீண்டும் மீண்டுமா?.. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா உறுதி.!
கழுத்தறுக்கப்பட்டு கொலை:
அரசியல் ரீதியான மோதல் சம்பவத்தில் நடந்த கொலையில், நடுரோட்டில் கைகள் துண்டிக்கப்பட்டு, கழுத்து அறுக்கப்பட்டு, கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு உயிர் பறிபோன சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த கொலையை நடுரோட்டில் நிகழ்த்தினாலும், அதனை கண்டு யாரும் கொலையை தடுக்க முன்வரவில்லை. துள்ளத்துடிக்க இரத்த வெள்ளத்தில் சடலம் கிடந்தது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியை இழந்து, தெலுங்கு தேசம் ஆட்சியை கைப்பற்றியது. ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் அரசியல் ரீதியான மோதல்கள் நகரங்கள் முதல் கிராமங்கள் வரை ஏற்பட்டுள்ளது என களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.
பதறவைக்கும் வீடியோ உங்களின் பார்வைக்கு:
Sensitive Content
Breaking news
పల్నాడు జిల్లా వినుకొండలో దారుణం
అందరు చూస్తుండగానే వైఎస్సార్సీపీ కార్యకర్తను నరికి చంపిన టీడీపీ కార్యకర్త
వినుకొండ వైఎస్ఆర్ కాంగ్రెస్ పార్టీ యువజన విభాగ నాయకుడు రషీద్ పై కత్తితో దాడి చేసి చంపిన జిలానీ అనే టీడీపీ కార్యకర్త
రషీద్ రెండు చేతులు… pic.twitter.com/6RRjznJCf8
— Telugu Scribe (@TeluguScribe) July 17, 2024