ஜூலை 18, வாஷிங்க்டன் டிசி (World News): உலகளவில் கடந்த 2019ம் ஆண்டு முதல் பரவத்தொடங்கி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரசுக்கு (Corona Virus Vaccine) எதிராக தடுப்பூசி அறிமுகமாகி, இன்று மக்கள் கொரோனாவின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு வாழ்ந்து வந்தாலும், ஆங்காங்கே கொரோனா பரவல் என்பது தலைதூக்கி வருகிறது. அமெரிக்காவை பொறுத்தமட்டில் கொரோனா வைரஸால் மிகப்பெரிய இழப்பை சந்தித்த நாடுகளில், அமெரிக்கா முதல் இடத்தை பெற்றுள்ளது. அங்கு 1,219,487 பேர் உயிரிழந்தனர். OnePlus Nord 4: அசத்தலான சிறப்பம்சங்களுடன் ஒன்பிளஸ் நார்டு 4 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்..! முழு விவரம் இதோ..!
ஜோ பைடனுக்கு கொரோனா உறுதி:
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு (US President Joe Biden) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறியுடன் அவருக்கு காய்ச்சல் மற்றும் இருமல் இருந்த நிலையில், மருத்துவ பரிசோதனையில் லேசான அறிகுறிகள் கொண்ட கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தனது அலுவலக பணிகளை தொடர்ந்து கவனிப்பார் என்றும் வெள்ளை மாளிகை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்த ஜோ பைடன், மருத்துவ சிகிச்சைக்கு பின் நலமடைந்தார். இதனிடையே மீண்டும் அவருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது.