IIT Student Suicide: ஐஐடி விடுதியில் தூக்கில் தொங்கிய மாணவர்; மன அழுத்தத்தால் 20 வயதில் நடந்த சோகம்.!
20 வயதில் மேற்படிப்புக்கு சேர்ந்த ஓராண்டுக்குள் கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சோகம் கவுகாத்தியில் நடந்துள்ளது.
ஏப்ரல் 12, கவுகாத்தி (Assam News): அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி ஐஐடியில் (Guwahati IIT Student Suicide), பிடெக் கம்பியூட்டர் சயின்ஸ் முதலாமாண்டு பயின்று வரும் மாணவர் சவுரப் (வயது 20). இவர் பீகார் மாநிலத்த்தில் உள்ள சமஸ்திபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில், நேற்று இரவு தனது விடுதி அறையில் மாணவர் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக தகவல் இருந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மாணவரின் உடலை மீட்டு பிரச்சனைக்காக அனுப்பி வைத்தனர். Health Tips for Eating Foods: மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத உணவுகள் எது?.. மக்களே தெரிஞ்சிக்கோங்க., மறந்தும் சாப்பிடாதீங்க.!
மகனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார்: மேலும், அறையில் இருந்த தடயங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் மாணவர் மன அழுத்தம் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டது தெரிய வந்தது. அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்ற விசாரணையானது நடந்து வருகிறது. உயிரிழந்த மாணவரின் பெற்றோர் பல்கலைக்கழகத்திற்கு விரைந்து மகனின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை முன் வைத்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
(The above story first appeared on LatestLY on Apr 12, 2024 11:47 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

