Andhra horror: 16 வயது பெண் கூட்டு பலாத்காரம்… 2 நாட்கள் அறையில் அடைத்து கொடூரம்..!
16 வயது சிறுமியை 7 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ள சம்பவம் தற்போது இந்தியாவையே உலுக்கியுள்ளது.
ஜனவரி 03, விசாகப்பட்டினம் (Visakhapatnam): ஓடிசாவை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கஞ்சரபாலத்தில் வசித்து வருகின்றனர். அந்த குடும்பத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, விசாகப்பட்டினம் ரயில்வே நியூ காலனியில் உள்ள ஒரு வீட்டில் நாய்களுக்கு உணவளிக்கும் வேலை செய்து வருகிறார். அதே வீட்டில் மற்றொரு வாலிபரும் வேலை செய்கிறார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. Virat Kohli On Ram Siya Ram Song: ஒருகணம் ஸ்ரீ ராமராக மாறிய விராட் கோலி; இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையே டெஸ்ட் தொடரில் நடந்த சம்பவம்.!
அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். அதன்படி கடந்த டிசம்பர் 18ம் தேதி சிறுமியை அவரது காதலன் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் தனது நண்பரையும் வரவழைத்துள்ளார். அவரும், சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் இருவரும், நடந்த சம்பவத்தை யாரிடமும் சொல்ல கூடாது என சிறுமியை மிரட்டியுள்ளனர். இதனால் கடும் மன வேதனை அடைந்த சிறுமி, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து ஆர்.கே.கடற்கரைக்கு சென்றுள்ளார்.
அப்போது, அங்கிருந்த போட்டோகிராபர், சிறுமியை சந்தித்து ஆறுதல் கூறுவது போல் நடித்து ஒரு அறைக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அவரது நண்பர்கள் 7 பேரும் அந்த சிறுமியை 2 நாட்களாக அறையில் அடைத்து தொடர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிய சிறுமி, ஒடிசா மாநிலம் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். Ginger Juice: இஞ்சி ஜூஸ் குடிக்கலாமா? அதனை எப்படி செய்வது?.!
இந்நிலையில் மகளை காணாமல் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் கடந்த டிசம்பர் 18-ம் தேதி விசாகப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவலர்கள் விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் சிறுமி தனது பெற்றோருக்கு போன் செய்து நடந்த அனைத்தையும் கூறி கதறியுள்ளார். அதனைத் தொடர்ந்து காவலர்களிடம் பெற்றோர் புகார் கொடுத்தர். அதன்படி இந்த வழக்கு தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
(The above story first appeared on LatestLY on Jan 03, 2024 05:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

