Virat Kohli Ram Siya Ram Song Reaction (Photo Credit: @mufaddal_vohraX)

ஜனவரி 03, ஜோக்கன்ஸ்பர்க் (Cricket News): தென்னாபிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி (IND Vs SA Test), தற்போது இரண்டாவது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் களமிறங்கிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 23.2 ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்து 55 ரன்கள் எடுத்து ஆள் அவுட் ஆனது.

முதல் இன்னிங்சில் தென்னாபிரிக்கா அணி: இரண்டாவது டெஸ்ட் தொடர் ஆட்டத்தில், முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய வேகத்திலேயே தென்னாபிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் சார்பில் விளையாடிய டேவிட் 17 பந்துகளில் 12 ரன்னும், கெயில் 30 பந்துகளில் 15 ரன்னும் அதிகபட்சமாக எடுத்திருந்தனர். பிற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டாகினர். Food Delivery with Horse: பெட்ரோல் தட்டுப்பாடால் அதிர்ச்சி: குதிரையில் சென்று உணவை டெலிவரி செய்த ஊழியர்.! 

விராட் கோலியின் செயல்: இந்நிலையில், விளையாட்டின்போது மைதானத்தில் ஆதிபுருஷ் திரைப்படத்தில் இடம்பெற்று இருந்த ராம் சியா ராம் (Ram Siya Ram) பாடல் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது, இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, சியா ராம் பாடலுக்கு, ராமர் வில் எய்துவது போன்ற காட்சியை செய்து காண்பித்தார். இது அங்கிருந்த ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. மேலும், இந்த விடியோவை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பலரும் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

ஆதிபுருஷ் (Adipurush) திரைப்படம்: ஸ்ரீ இராமரின் வாழ்வியலை மையப்படுத்திய வால்மீகியின் இராமாயணத்தை தழுவி, முப்பரிமாண தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆதிபுருஷ். இப்படத்தை ரூ.700 கோடி பொருட்செலவில் ஓம் ராவத் இயக்கி இருந்தார். படத்தில் பிரபாஸ், கீர்த்தி சனோன், சைப் அலி கான், சன்னி சிங் உட்பட பலரும் நடித்து இருந்தனர். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படம், கலவையான விமர்சனத்தை பெற்றது. ரஜினிகாந்தின் கோச்சடையான் (Kochadaiiyaan) திரைப்படத்தை போலவே, கதைக்களம் அட்டகாசமாக இருப்பினும், காட்சிகள் காரணமாக பிரம்மாண்டமாக தயாராகி கலவையான விமர்சனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.