நவம்பர் 23, டெல்லி (New Delhi): டெல்லியில் உள்ள ஜப்ராபாத் (Jafrabad) பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், தனது தாயுடன் வசித்து வருகிறார். இவரின் தாய் தினக்கூலியாக வேலைபார்த்து வருகிறார். அங்குள்ள வெல்கம் பகுதியில் இருக்கும் ஜன்தா மஸ்தூர் காலனி பகுதியில் 16 வயது சிறுவன் பெற்றோருடன் வசித்து வருகிறான். சிறுவனின் பெற்றோர் இருவரும் கூலித்தொழிலாளர்கள் ஆவார்கள்.
17 வயது சிறுவனுக்கும், 16 வயது சிறுவனுக்கும் இடையே நட்பு ரீதியான பழக்கம் இருந்து வந்துள்ளது. 16 வயது சிறுவன் பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்திவிட்டு, மதுபோதைக்கு அடிமையாகி ஊரைச்சுற்றி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று சிறுவன் தனது 17 வயது நண்பனின் வீட்டிற்கு இரவு 10 மணிக்கு சென்றிருந்துள்ளார். அச்சமயம் நண்பனிடம் ரூ.350 பணம் பிரியாணி சாப்பிட கேட்டுள்ளார். அவரோ பணம் இல்லை என்று கூறியுள்ளார். Mettupalaiyam Coonoor Road Landslide: ஒரேநாளில் கொட்டித்தீர்த்த பேய்மாழை: குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் நிலச்சரிவு.. நடுவழியில் வாகனங்கள் நிறுத்தம்.!
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரியவருகிறது. மதுபோதையில் இருந்த 16 வயது சிறுவன், 17 வயது சிறுவனின் முகம், கழுத்து உட்பட உடலில் 60 இடங்களை சரமாரியாக வெட்டி இருக்கிறார். இந்த சம்பவத்தை அரங்கேற்றிய கொடூரன், கொலை செய்தவாறு அவ்வப்போது நடனமாடிய சம்பவமும் நடந்துள்ளது. இவை அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருக்கிறது.
கொலை சம்பவம் நடந்து முடிந்ததும், எதற்ச்சையாக வெளியே வந்த ஒருவர் 17 வயது சிறுவன் துள்ளத்துடிக்க இரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அவரை மீட்டு உடனடியாக அங்குள்ள ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது, மருத்துவர்கள் உயிரிழப்பை உறுதி செய்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், 17 வயது சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து 16 வயது சிறுவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈரக்குலை நடுங்கும் சம்பவத்தின் அதிர்ச்சி வீடியோவை, இளம் மனம் கொண்டவர்கள் பார்க்க வேண்டாம்.. நேரடிக்காட்சிகள் (Do not Watch this Video, If you Have Soft Tenure Heart) இடம்பெற்றுள்ளன.
#BREAKING In Welcome, Delhi ₹ Murder for 350 rupees biryani, the accused danced after being stabbed 60 times#Delhi #Delhimurder #DelhiAirPollution #UttarkashiRescue #AnimalTrailer #Panauti #IPLAuction #IPL2024 #jjk243 #Mathura #earthquake #Islamophobic #T20WorldCup pic.twitter.com/qzFnSyO8Im
— Arun Gangwar (@AG_Journalist) November 23, 2023