நவம்பர் 23, மேட்டுப்பாளையம் (Coimbatore News): தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ (Northeast Monsoon) மழையானது தீவிரமடைந்துள்ளது. இதனால் தென் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான இடத்திலும், வட தமிழகத்தில் ஒரு சில இடத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
சென்னை வானிலை (Chennai Regional Meteorological Center) ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி உட்பட பல மாவட்டங்களுக்கு அதிக கனமழையும், ஈரோடு, திருப்பூர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி, கடலூர் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு இருந்தது.
வானிலை (Tamilnadu Weather Alert) ஆய்வு மையம் தெரிவித்தது போல கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி பகுதிகளில் நேற்று கனமழை பெய்து கொண்டு இருந்தது. தொடர் கனமழையின் காரணமாக, தற்போது மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. 15 Fisherman Return Tamilnadu: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 15 இராமேஸ்வரம் மீனவர்கள் தாயகம் வந்தனர்: பாஜகவினர் விமான நிலையத்தில் வரவேற்பு.!
இதனால் சாலையில் வாகனங்கள் செல்ல இயலாத சூழ்நிலை உருவாகியுள்ளது. ஊட்டி-குன்னூர் (Ooty, Coonoor) போன்ற நகரங்களுக்கு பயணித்த வாகனங்கள் நடுவழியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. ஊட்டி நோக்கி பயணித்த அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து ஒன்றின் மீது ராட்சத மரம் சாய்ந்து விபத்திற்குள்ளானது.
நல்வாய்ப்பாக தற்போது வரை எந்தவிதமான உயிரிழப்பும் ஏற்படாத நிலையில், அங்கு மீட்புப்பணிகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன. தொடர் மழையின் மேட்டுப்பாளையம் - குன்னூர் (Mettupalaiyam - Coonoor Road) சாலையில் நிலச்சரிவுகள் தொடருவதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
அவ்வழித்தடத்தில் இரவில் இருந்து சென்ற பேருந்துகளும், கார்களும் நடு வழியில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன. மேற்படி செல்லவும் இயலாமல், கீழே இறங்குவும் வழி இல்லாமல் வாகனங்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளதால், சுற்றுலா மற்றும் பொது பயணிகளும் அவதியடைந்துள்ளனர்.
நேற்று ஒரேநாளில் மேட்டுப்பாளையம் (Mettupalaiyam) சரகத்தில் அதிகபட்சமாக 373 மிமீ (37.3 செ.மீ) மழையளவு பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளில் இருந்தே, நேற்றுதான் அதிக மழைப்பொழிவு பதிவாகி இருக்கிறது.
மேட்டுப்பாளையம் - கோத்தகிரி மழைப்பொழிவு அளவு:
Extremely rains in Mettupalayam & Kotagiri both got huge 341mm and 241mm rains (Yet to be verified)
Kotagiri-Mettupalayam road blocked with fallen trees and landslides 😯
Eastern part of Nilgiris rarely gets such rains. Huge Convergence from the east with UAC in Kerala nothing… pic.twitter.com/n7XkcJq673
— Chennai Weatherman (@chennaisweather) November 23, 2023
நிலச்சரிவால் வாகனங்கள் நடுவழியில் நிறுத்தம்:
தற்பொழுது 23/11/23#குன்னூர்#மேட்டுப்பாளையம் சாலையில் மரம் மற்றும் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் தற்காலிகமாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. https://t.co/BIIW4eENzQpic.twitter.com/ioMth5PFYU
— Kalyanasundaram (@kalyanasundarsv) November 23, 2023
மேட்டுப்பாளையம் - குன்னூர் நெடுஞ்சாலை மண்சரிவு:
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.#Nilgiris | #TamilnaduRainpic.twitter.com/ZN1jIbNGsn
— Indian Express Tamil (@IeTamil) November 23, 2023