Delhi Shocker: 52 வயது நபரால் பச்சிளம் சிறுமி பாலியல் பலாத்காரம் & கொலை; டெல்லியில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்.!

9 வயது பச்சிளம் சிறுமியை தன்னுடன் அழைத்துச்சென்று சீரழித்து கொலை செய்த கயவன், வீட்டிற்கு வரும் வழியில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி வருகிறான். ஒரே பகுதியில் வசித்து வந்த நபரால், சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தோதொகுப்பு.

Delhi Shocker: 52 வயது நபரால் பச்சிளம் சிறுமி பாலியல் பலாத்காரம் & கொலை; டெல்லியில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்.!
Sexual Abuse / Rape Representational Image (Photo Credit: Pixabay)

டிசம்பர் 20, புதுடெல்லி (New Delhi): புது டெல்லியில் உள்ள நங்கிலி பூனா கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுமியின் பெற்றோர், கூலித்தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். இருவரும் காலையில் வேலைக்கு சென்றுவிட்டு, பின் மாலையில் வீடு திரும்புவது வழக்கம். இவர்களின் வீட்டருகே 52 வயதுடைய சஞ்சீவ் ராணா என்பவர் வசித்து வந்துள்ளார்.

சிறுமி மாயம்: இந்நிலையில், கடந்த டிசம்பர் 12ம் தேதி சிறுமி வீட்டில் இருந்து மயமாகி இருக்கிறார். மகளை தேடி அலைந்த பெற்றோர், ஸ்வரூப் நகர் காவல் நிலையத்தில் மகள் காணாமல் போனதாக புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

காவல்துறையினர் விசாரணை: அங்குள்ள சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தபோது, சிறுமியை சஞ்சீவ் ராணா காரில் கடத்தி சென்றது தெரியவந்தது. ராணா எங்கே சென்றார்? என அதிகாரிகள் விசாரணையை முன்னெடுத்தபோது, அவர் விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது தெரியவந்தது. Man Kills Wife: 18 முறை கத்தியால் சதக்., சதக்.. காதல் மனைவிக்கு துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்: குடும்ப தகராறில் கணவர் வெறிச்செயல்.! 

Crime File Picture (Photo Credit: PIxabay)

அதிர்ச்சி தகவல் அம்பலம்: சிறுமியின் நிலை என்பது தெரியாமல் இருந்ததாலும், ராணாவால் வாக்குமூலம் கொடுக்க இயலாத சூழல் காரணமாகவும் விசாரணை தாமதமாகியது. நேற்று முன்தினம் ராணாவுக்கு சுயநினைவு திரும்பி, வாக்குமூலம் கொடுத்தார். அப்போது அதிகாரிகள் அதிர்ச்சியுறும் உண்மை அம்பலமானது.

பலாத்காரம் செய்து கொலை: டிசம்பர் 12ம் தேதி சிறுமியை தன்னுடன் அழைத்துச்சென்ற கயவன், அவரை பலாத்காரம் செய்துள்ளான். இதனால் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துவிடவே, அவரின் உடலை கால்வாயில் வீசி இருக்கிறார். பின் வீட்டிற்கு திரும்பியபோது விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது தெரியவந்தது.

தேடப்படும் சிறுமியின் சடலம்: இந்த விபரத்தை அறிந்த அதிகாரிகள் சிறுமியின் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 9 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், டெல்லி மாநில மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையை டெல்லி தெற்கு புறநகர் காவல் உதவி ஆணையர் ரவிக்குமார் சிங் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Dec 20, 2023 12:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).