Crime File Pic (Photo Credit: Pixabay)

டிசம்பர் 20, லக்னோ (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ, ரோஷன் நகர் பகுதியில் வசித்து வருபவர் அனந்தேஸ்வர் அக்ரஹரி. இவரின் மனைவி சந்தியா சாஹு. தம்பதிகள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னதாக காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் ஆவார். இருவரின் அன்புக்கு அர்த்தமாக 2 மகன்கள் இருக்கின்றனர். மூத்த மகன் தன்ஷிக் வாய் பேச இயலாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி ஆவார். 9 வயதுடைய இரண்டாவது மகன் ஷயுர்யா, அங்குள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வருகிறார்.

காதல் திருமணம், குடும்ப பிரச்சனை: தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், பிசியோதெரபிஸ்ட்டாக பணியாற்றி வரும் அனந்தேஸ்வர், நீண்ட காலமாக நிதி பிரச்சனையை எதிர்கொண்டு வந்துள்ளார் இதனால் குடும்பத்தை சரிவர நடத்த இயலாமலும் தவித்துள்ளார். ஒருகட்டத்தில் வீட்டு வருமானம் மற்றும் செலவு தொடர்பாக இருவருக்கும் இடையே விரக்தி ஏற்பட, காதல் திருமணம் செய்த ஜோடிகள் மனரீதியாக கருத்து வேறுபாடு கொண்டு சண்டையிட்டு வாழ்ந்து வந்துள்ளது. இவர்களுக்குள் அடிக்கடி சண்டை நடப்பதும், பின் சமாதானம் ஆவதும் தொடர்ந்துள்ளது.

வாக்குவாதத்தில் கணவர் விபரீத முடிவு: இந்நிலையில், கடந்த டிசம்பர் 04ம் தேதி இருவருக்கும் இடையே கடுமையான சண்டை நடந்துள்ளது. இதனால் தனது மனைவியை கொலை செய்திட வேண்டும் என்ற விபரீத எண்ணம் அனந்தேஸ்வர்க்கு ஏற்பட்டுள்ளது. அச்சமயம் தனது இளையமகன் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வர, அவருக்கு மயக்க மருந்து கொடுத்து உறங்க வைத்துள்ளார். மூத்த மகன் காது கேட்காத, பேச இயலாத மாற்றுத்திறனாளி என்பதால் எதுவும் செய்யவில்லை. Korean Vlogger Sexually Harassed: கொரிய யூடியூபரை கட்டிப்பிடித்த இளைஞர் கைது: வீடியோ வெளியானதால் அதிரடியாக களமிறங்கிய அதிகாரிகள்.! 

Crime (Photo Credit: Pixabay)

18 முறை கத்தியால் சதக்., சதக்..: வீட்டுக்குள் சந்தியா - அனந்தேஸ்வர் ஜோடி கடுமையாக வாக்குவாதம் செய்து சண்டையிட்ட நிலையில், ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற அனந்தேஸ்வர் மனைவியை 18 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். தாய் வலியால் அலறியபோதும், மூத்த மகனுக்கு காது கேட்காது என்பதால் அவருக்கு எதுவும் தெரியவில்லை. கொலையை அரங்கேற்றிய அனந்தேஸ்வர், அங்கிருந்து தப்பி சென்றார். மறுநாள் (5 டிசம்பர் 2023) காலையில் சந்தியாவின் தாய் எதற்ச்சையாக தனது மகளின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

குற்றவாளி கைது: அங்கு தனது மகள் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அலறியுள்ளார். அவரின் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில் உண்மை அம்பலமாகவே, தலைமறைவான அனந்தேஸ்வருக்கு வலைவீசப்பட்டது. கிட்டத்தட்ட 15 நாட்கள் தேடலுக்கு பின்னர், நேற்று குற்றவாளி அனந்தேஸ்வர் கைது செய்யப்பட்டார்.

சிறையில் அடைப்பு: அவரின் மீது தாகூர்கஞ்ச் காவல் துறையினர், சந்தியா சாஹுவின் சகோதரர் அமன் சாஹு அளித்த புகாரின் பேரில், இந்திய அரசியலமைப்பு சட்டம் 302வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.