Remote & Crime File Pic (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 01, டெல்லி (New Delhi News): புதுடெல்லியில் உள்ள வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள ஸ்வரூப் நகரில் வசித்து வருபவர் ரஞ்சித். இவர், அப்பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் நபரும் நபர்கள் ஆவார்கள். அவருக்கு திருமணம் முடிந்து மனைவி, 7 வயது குழந்தை இருக்கின்றனர். நண்பர் என்ற முறையில் ரஞ்சித் வீட்டுக்கு கூலித் தொழிலாளி செல்வதும், அவர் இங்கு வருவதும் இயல்பு என கூறப்படுகிறது. நண்பரின் மகளான 7 வயது சிறுமியும் ரஞ்சித் வீட்டுக்கு அவ்வப்போது செல்வது வாடிக்கை என சொல்லப்படுகிறது. கணவருடன் கோவிலுக்குச் சென்ற பெண் பாலியல் வன்கொடுமை; கணவரை கட்டிப்போட்டு நடந்த கொடுமை.!

சிறுமி கழுத்து நெரித்துக்கொலை:

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுமி சந்தேகத்திற்கு இடமான வகையில், இரவில் தெருவில் அசைவற்று இருந்தார். அவரின் தலையில் காயம் இருந்த நிலையில், தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின் சிறுமியின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடந்தது. விசாரணையில், அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா ஆய்வு செய்யப்பட்டு, ரஞ்சித் சந்தேக வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டார். அவரிடம் நடந்த விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரிவியவந்தது.

போதை பயத்தில் படுபயங்கரம்:

அதாவது, சம்பவத்தன்று ரஞ்சித் போதையில் டிவி பார்த்துக்கொண்டு இருந்தார். அச்சமயம், 7 வயது சிறுமி டிவி ரிமோட் எடுத்து தனக்கு பிடித்த சேனல் வைத்துள்ளார். இதனால் ரஞ்சித் ரிமோட் கேட்டு இருக்கிறார். சிறுமி மறுத்ததால், ஆத்திரமடைந்த ரஞ்சித், அவரை தாக்கியுள்ளார். இதனால் கீழே விழுந்த சிறுமியின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. எங்கு சிறுமி தன்னை காட்டிக்கொடுத்துவிடுவாரோ என பயந்த ரஞ்சித், கழுத்தை நெரித்து கொலை சம்பவத்தை அரங்கேற்றியது அம்பலமானது. உண்மை தெரியவந்ததைத்தொடர்ந்து ரஞ்சித்தை காவல்துறையினர் கைது செய்தனர்.