ஏப்ரல் 01, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நாகர்கர்நூல் மாவட்டம், உர்கொண்டபேட்டா பகுதியில் கணவரை கட்டிப்போட்டு, பெண்ணை கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது. சுமார் 7 பேர் சேர்ந்து இக்கொடூரத்தை அரங்கேற்றி இருக்கின்றனர். கடந்த சனிக்கிழமை பெண்மணி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய தனது கணவருடன் சென்றுள்ளார். Krishnagiri Shocker: வெந்நீரில் விழுந்து 3 வயது பச்சிளம் பிஞ்சு பரிதாப பலி.. கண்ணிமைக்கும் நேர்ந்த சோகம்.! பெற்றோர்களே கவனம்.!
7 பேர் கும்பல் கைது:
அப்போது, இயற்கை உபாதைக்காக பெண் ஒதுங்கிய நிலையில், தம்பதியை நோட்டமிட்ட நபர்கள் புத்த பகுதிக்குள் இழுத்துச்சென்று கணவரை கட்டிப்போட்டு. மேலும், பெண்ணை கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த விஷயம் குறித்து தம்பதி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், எலக்ட்ரீசியன், ஆட்டோ ஓட்டுநர், சமையல் உதவியாளர்கள் என 7 பேரை கைது செய்தனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3