Temple Stampede Death: கூட்டநெரிசலால் பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்.. கோவில் வளாகத்தில் 6 உயிர்கள் பலி.!
பிரசித்தி பெற்ற கோவா கோவிலில் நடந்த திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிய பக்தர்கள் 6 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. மேற்படி விபரங்கள் காத்திருக்கின்றன.
மே 03, கோவா (Goa Temple Stampede): கோவா மாநிலத்தில் உள்ள ஷிரகோன் பகுதியில் புகழ்பெற லட்சுமி தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு திருவிழா நடந்து கொண்டு இருந்தபோது, பக்தர்கள் கூட்டம் அலைமோதி இருந்தது. காவல்துறையினர் உரிய பாதுகாப்பு பணிகளை முன்னெடுத்து இருந்தனர். அப்போது, கட்டுக்கடங்காத வகையில் குவிந்த பக்தர்கள் வெள்ளத்தால் கூட நெரிசல் ஏற்பட்டுள்ளது. Solo Leveling: ரசிகர்கள் எதிர்பார்த்த சோலோ லெவலிங் சீசன் 3 எப்போது? ட்விஸ்ட் வைத்த தயாரிப்புக்குழு.!
6 பேர் பலி, 50 பேர் படுகாயம்:
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 50 க்கும் அதிகமானோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். அதிகமான பக்தர்கள் ஒரே நேரத்தில் திடீரென குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது என உள்ளூர் களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விஷயம் குறித்து போலீசார் முதற்கட்ட விசாரணையையும் தொடங்கியுள்ளனர்.
களத்தில் பதிவு செய்யப்பட்ட காணொளி:
गोवा में भगदड़..
7 लोगो की मौत, 30 लोग घायल.#Goa pic.twitter.com/TzPHWv9yK2
— Vivek Gupta (@imvivekgupta) May 3, 2025
(The above story first appeared on LatestLY on May 03, 2025 07:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

