Solo Leveling: ரசிகர்கள் எதிர்பார்த்த சோலோ லெவலிங் சீசன் 3 எப்போது? ட்விஸ்ட் வைத்த தயாரிப்புக்குழு.!

ரசிகர்களின் எதிர்பார்ப்பு மற்றும் ஆதரவைப்பொறுத்து சோலோ லெவலிங் சீசன் 3 எபிசோட் வெளியாகும் என தயாரிப்புக்குழு அறிவித்துள்ளது.

Solo Leveling: ரசிகர்கள் எதிர்பார்த்த சோலோ லெவலிங் சீசன் 3 எப்போது? ட்விஸ்ட் வைத்த தயாரிப்புக்குழு.!
Solo Leveling Season 2 (Photo Credit: @DigitalLA /@MJEED_V77 X)

மே 03, கலிபோர்னியா (Solo Leveling News in Tamil): கொரிய மொழி எழுத்தாளர் சுகாங் (Chugong) கற்பனையில் உருவான சோலோ லெவலிங் (Solo Leveling) எனப்படும் அனிமேஷன் கற்பனை தொடர், உலகளவில் பிரபலமாகி இருக்கிறது. இதன் முதல் சீசன் வெளியாகி மிகப்பெரிய அளவு வெற்றி கிடைத்த நிலையில், தற்போது சோலோ லெவலிங் சீசன் 2: அரைஸ் (Solo Leveling Season 2: Arise from the Shadow) ஒளிபரப்பு செய்யப்பட்டு முதல் சீசனை போல நல்ல வரவேற்பை பெற்றது. RCB Vs CSK: ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா? இன்று சென்னை - பெங்களூர் அணிகள் மோதல்.! 

ரசிகர்களின் ஆதரவைப்பொறுத்து விரைவில்:

அதனைத்தொடர்ந்து, அதிக சஸ்பென்ஸுடன் சோலோ லெவலிங் சீசன் 3 (Solo Leveling Season 3) உருவாகி வருகிறது. அடுத்த ஆண்டு 3 வது சீசன் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, கலிபோர்னியாவில் செய்தியாளர்களை சந்தித்த சோலோ லெவலிங் தயாரிப்புக்குழு, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பொறுத்து சோலோ லெவலிங் 3 விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளது. சோலோ லெவலிங் பார்க்க தனி கூட்டம் இருந்தாலும், அதனை விநியோகம் செய்யும் கிரன்சிரோல் பக்கத்தில் பிரீமியம் தொகை செலுத்தி பார்க்காமல், திருட்டுத்தனமாக பதிவிடப்படும் வீடியோவை பலரும் பதிவிறக்கம் செய்து பார்ப்பதே இவ்வகை கருத்துக்கு காரணம் எனவும் பேசப்படுகிறது.

(The above story first appeared on LatestLY on May 03, 2025 07:43 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).