Road Accident 5 Died: லாரியின் பின்னால் சொருகி உருக்குலைந்த கார்; 5 தொழிலாளர்கள் பரிதாப பலி.!

தொழிலாளர்கள் தங்களின் வேலைக்காக காரில் பயணம் செய்துகொண்டு இருந்தபோது, அவர்களின் வாகனம் விபத்தில் சிக்கியதில் 5 பேர் பலியான சோகம் நடந்துள்ளது.

Ahmedabad Dholka Road Accident (Photo Credit: @IANS X)

பிப்ரவரி 27, அகமதாபாத் (Gujarat News): குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் மாவட்டம், தோல்கா, போலன் சவுக்டி பகுதியில் கார் ஒன்று கனரக லாரியின் மீது மோதி பயங்கர (Ahmedabad Dholka Highway Accident) விபத்தில் சிக்கியது. ஒரே திசையில் முன்னால் சென்றுகொண்டு இருந்த லாரியின் மீது, பின்னால் அதிவேகமாக வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு நேரத்தில் இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், விபத்து குறித்து தகவல் அறிந்த தோல்கா காவல்துறையினர், பலியானோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். Pankaj Udhas Dies: பத்ம ஶ்ரீ விருது பெற்ற புகழ்பெற்ற பாடகர் பங்கஜ் உத்ஹாஸ் காலமானார்: சோகத்தில் ரசிகர்கள்.! 

ம.பி மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலி: மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், விபத்தில் சிக்கிய அனைவரும் தொழிலாளர்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள பெய்டோல் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டது. இவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அகமதாபாத் வந்ததும் பலியானோரின் விபரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement