Saudi Arabia Bus Crash 42 Indians Dead (Photo Credit : @A98670000 X)

நவம்பர் 17, சவூதி அரேபியா (World News): சவுதிக்கு புனித பயணம் மேற்கொண்ட 42 இந்தியர்கள் பேருந்து விபத்தில் பலியான அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தில் இருந்து மக்காவுக்கு புனிதப்பயணம் மேற்கொண்ட யாத்ரீகர்கள் பேருந்து மூலம் சென்றுள்ளனர். இவர்கள் மக்காவில் தொழுகையை முடித்து விட்டு மதீனாவுக்குச் சென்று கொண்டிருந்தனர். யாத்ரீகர்கள் மக்காவில் தங்களது புனித சடங்குகளை முடித்து இறுதி யாத்திரையாக மதீனாவுக்கு செல்லும் வழியில் டீசல் லாரி மீது இவர்களது வாகனம் மோதி இருக்கிறது.

புனித யாத்திரை விபத்தில் இந்தியர்கள் பலி:

நள்ளிரவில் பயணிகள் கண் அயர்ந்து உறங்கிய சமயத்தில் ஜோரா எனும் இடத்தில இந்தியர்கள் சென்ற பேருந்து டீசல் லாரி மீது மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் பேருந்து தீப்பிடித்து வெடித்து சிதறிய நிலையில், சற்று நேரத்திலேயே தீ பேருந்து முழுக்க பரவியதால் யாத்ரீகர்களால் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 42 இந்தியர்களும் உடல்கருகி உயிரிழந்தனர். Gen Z Protest: மெக்சிகோவில் வன்முறையாக வெடித்த ஜென் ஸீ போராட்டம்.. 100 காவலர்கள் படுகாயம்.. அதிர்ச்சி வீடியோ.!

பேருந்து - டீசல் லாரி மோதி கோர விபத்து: