அக்டோபர் 28, நைரோபி (World News): கென்யாவின் கடலோரப் பகுதியான குவாலேயில் இன்று (அக்டோபர் 28) அதிகாலை மசாய் மாரா தேசிய சரணாலயத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. இதில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 12 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். டயானி விமான ஓடுபாதையில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலைப்பாங்கான மற்றும் காட்டுப் பகுதியில் இந்த விபத்து நடந்ததாக அதிகாரிகள் கூறினர். Indian-Origin Woman Rape: இந்திய வம்சாவளி பெண் பாலியல் பலாத்காரம்.. 32 வயது நபர் அதிரடி கைது..!
விமான விபத்து:
விபத்துக்குள்ளான செஸ்னா கேரவன் ரக விமானத்தில் 12 பேர் இருந்ததாகவும், விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும் கென்யா சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்து நிகழ்ந்துள்ளது. தீப்பிடித்து எரிந்ததால், சம்பவ இடத்திலேயே 12 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.