Louisville Airport Plane Crash Video (Photo Credit: @Jere_Memez)

நவம்பர் 05, கென்டகி (World News): அமெரிக்காவில் உள்ள கென்டகி மாகாணம், லூயிஸ்வில்லே நகரில் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து, இன்று சரக்கு விமானம் ஒன்று 3 விமானிகள் குழுவுடன் ஹவாய்க்கு புறப்பட தயாராக இருந்தது. விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதற்கான அனுமதி கிடைத்ததும், விமானம் மேலெழும்பி பறக்கத் தொடங்கியது. ஆனால், விமானம் பறந்த சில நொடிகளிலேயே திடீரென அங்கிருந்த கட்டிடத்தின் மீது விழுந்து விபத்தில் சிக்கியது. ChatGPT Go: சாட்ஜிபிடி கோ முற்றிலும் இலவசம்.. இந்தியர்களுக்கு சிறப்பு சலுகை அறிவித்த ஓபன் ஏஐ நிறுவனம்.! 

விமானம் விழுந்து விபத்து:

விமானம் விழுந்து நொறுங்கியதால், அதன் எரிபொருள் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 3 விமானிகளும் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், விபத்து குறித்து விசாரணையும் நடந்து வருகிறது. விபத்துக்கு முன்னதாக அவ்வழியே சென்ற காரில் பதிவான வீடியோ காட்சிகள் வெளியாகி பதறவைத்துள்ளன.

சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்து (Cargo Flight Crash Video Today):