Jharkhand Shocker: வகுப்பு நண்பர்களுடன் பிரச்சனை: 11ம் வகுப்பு மாணவர் கொலை.. 2 மாணவர்கள் தலைமறைவு.!

நண்பர்களுக்கு இடையே வகுப்பறையில் நடந்த சண்டையில், 11ம் வகுப்பு பயின்று வரும் மாணவர் மர்ம மரணம் அடைந்துள்ளார். அவரின் மரணத்தை கொலை என்பதை உறுதிசெயும்பொருட்டு 2 மாணவர்களும் தலைமறைவாகி இருக்கின்றனர்.

Jharkhand Shocker: வகுப்பு நண்பர்களுடன் பிரச்சனை: 11ம் வகுப்பு மாணவர் கொலை.. 2 மாணவர்கள் தலைமறைவு.!
Murder | Crime File Pic (Photo Credit: Pixabay)

ஜனவரி 13, ஹசரிபாக் (Jharkhand News): ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹசரிபாக் (Hazaribag) மாவட்டம், கோரா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுவன், அங்குள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த ஜனவரி 06ம் தேதி சிறுவனுக்கும் - அவருடன் பயின்று வந்த சக மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிறுவன் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராத நிலையில், மகனை தேடிய பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்துவிட்டு, மகன் மாயமானதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் சிறுவன் மாயமானது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். TN Transport Workers Incentive: போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை.. தமிழக அரசு அறிவிப்பு..! 

கிணற்றில் சடலம் மீட்பு: இந்த நிலையில், சிறுவனின் சடலம் அங்குள்ள கைவிடப்பட்ட கிணறு ஒன்றில் (School Student Killed) சடலமாக மிதந்தது. 6 நாட்கள் கழித்து நேற்றுதான் சிறுவனின் மர்ம மரணம் தெரியவந்த நிலையில், தகவல் அறிந்த காவல் துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகையில், சிறுவன் தனது வகுப்பு தோழர்களுடன் பிரச்சனையில் இருந்த நிகழ்வு தெரியவந்திருக்கிறது. உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதை தொடர்ந்து, அதன் முடிவுக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

தலைமறைவான மாணவர்கள்: அதேவேளையில், சிறுவனின் மர்ம மரணத்தில் சந்தேகப்படும் வளையத்தில் இருந்த 2 மாணவர்களும் தலைமறைவாகி இருப்பதால், அவர்களை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் கைதாகிய பின்னரே சிறுவனின் மரணத்தில் உள்ள மர்மம் விலகும் என அதிகாரிகள் தெரிவிகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Jan 13, 2024 07:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).