ஜனவரி 12, சென்னை (Chennai): தமிழக போக்குவரத்து கழகத்தை சேர்ந்த சிஐடியு மற்றும் ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்கத்தினர், போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், கழகத்தின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், வாரிசு பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் ஆகிய 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்கள் போராட்டம் செய்தனர். பின்னர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போராட்டத்தை நேற்றுடன் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். Kalaignar Karunanidhi Centenary: ஜல்லிக்கட்டு அரங்கிற்கு கலைஞர் பெயர்... கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்...
போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை: இந்த நிலையில் 2023ம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகைக்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதில் ஊழியர்கள் ஆண்டின் கடைசி நாளில் வேலைக்கு வந்திருக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டில் 200 நாட்கள் மற்றும் அதற்கு மேலாக பணிபுரிந்தவர்களுக்கு 625 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. 151 நாட்கள் முதல் 199 நாட்கள் வரை பணிபுரிந்த ஊழியர்களுக்கு 195 ரூபாயும் 91 நாட்கள் முதல் 151 நாட்கள் வரை பணி புரிந்தவர்களுக்கு 85 ரூபாயும் ஊக்கத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊக்கத்தொகையானது ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உட்பட்டவர்களுக்கு வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.