Flesh Trade: 14 வயது சிறுமிகள்.. சொந்த குடும்பத்தால் சிறுமிகளுக்கு நேர்ந்த துயரம்.. பத்திரமாக மீட்பு..!
வேலை கொடுப்பதாக கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 12 சிறுமிகள் மீட்கப்பட்ட சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.
அக்டோபர் 23, பெங்களூர் (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு நகர் (Flesh Trade in Bangalore) மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், திரிபுரா, மேற்குவங்கம், பஞ்சாப், மகாராஷ்டிரா, கர்நாடகா உட்பட பல மாநிலங்கல்ஜில் இருந்து பெண்கள், சிறுமிகள் கொண்டு வரப்பட்டு பாலியல் தொழில், பாலியல் அடிமையாக சிறுமிகள் விற்பனை போன்ற செயல்கள் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி 12 சிறுமிகளை பத்திரமாக மீட்டனர். Actor Mukesh: நடிகை பாலியல் புகார்.. மலையாள நடிகர் முகேஷ் மீண்டும் கைது..!
14 முதல் 17 வயதுள்ள சிறுமிகள்:
விசாரணையில், சிறுமிகள் வேலைக்கு என அழைத்து வரப்பட்டு, பின் கும்பலின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், 3 க்கும் மேற்பட்ட சிறுமிகளை, அவர்களின் பெற்றோரே விற்பனை செய்த அவலமும் அம்பலமாகி இருக்கிறது. இவர்களை தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் அதிகாரிகள் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட சிறுமிகளுக்கு 14 வயது முதல் 17 வயது வரை மட்டுமே ஆகும். இவர்கள் தற்போது அரசின் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பெற்றோருடன் செல்ல விரும்பும் சிறுமிகளை, அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கின்றனர். மொத்தமாக இந்த விவகாரத்தில் 3 புரோக்கர்கள், 26 வாடிக்கையாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
(The above story first appeared on LatestLY on Oct 23, 2024 10:11 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

