அதிகாரத்திமிர்? ஏ.எஸ்.பி-க்கு பளார் விட முற்பட்ட முதல்வர்.. அதிர்ச்சி வீடியோ லீக்..!
மேடையில் பொறுமையை இழந்த கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா ஏஎஸ்பி பதவி கொண்ட காவல் அதிகாரியை அடிக்கப்பாய்ந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
ஏப்ரல் 29, பெலகாவி (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டம், தார்வாட் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா நேரில் சென்றார். அப்போது, கூட்டத்துக்குள் மர்மமான வகையில் புகுந்த சில பாஜக நிர்வாகிகள் கருப்பு கொடி காண்பித்து இருக்கின்றனர். இதனால் சித்தராமையா கடுமையான ஆத்திரம் அடைந்தார். Trending Video: கட்சி நிர்வாகிகளுக்கு மதுவுடன் தடபுடல் விருந்து? எம்.எல்.ஏ பெயரில் வைரலாகும் வீடியோ.!
ஏஎஸ்பி-க்கு அதிர்ச்சி:
ஆத்திரத்தில் தார்வாட் ஏஎஸ்பி நாராயண பரமானியை அழைத்தவர், கன்னத்தில் அடிப்பது போல கையை ஓங்கினார். ஏஎஸ்பி லேசாக விலகிக்கொண்டார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி கடுமையான கண்டனத்தை குவித்து வருகிறது. ஆத்திரத்தில் சித்தராமையா மேடையில் பேசும்போது, "ஏய் இங்கே வா. யார் அந்த எஸ்பி? நீங்க என்ன பண்றீங்க?" என உரத்த குரலில் கேள்வி எழுப்பி அடிக்கப் பாய்ந்தார்.
முதல்வரின் அதிர்ச்சி செயல்:
📍Karnataka | #Watch: Siddaramaiah's Slap Gesture At Cop After He Loses Cool On Stage
Read more: https://t.co/KrY7F8PTEz pic.twitter.com/p3rG6KfN49
— NDTV (@ndtv) April 28, 2025
(The above story first appeared on LatestLY on Apr 29, 2025 08:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

