Trending Video: கட்சி நிர்வாகிகளுக்கு மதுவுடன் தடபுடல் விருந்து? எம்.எல்.ஏ பெயரில் வைரலாகும் வீடியோ.!

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் கட்சி நிர்வாகிகளுக்கு பீர் விருந்து வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்து சர்ச்சை வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Trending Video: கட்சி நிர்வாகிகளுக்கு மதுவுடன் தடபுடல் விருந்து? எம்.எல்.ஏ பெயரில் வைரலாகும் வீடியோ.!
Liquor Treat by MLA (Photo Credit: @PhoenixAdmk X)

ஏப்ரல் 29, கள்ளக்குறிச்சி (Kallakurichi News): தமிழ்நாட்டில் போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை விடுபட வேண்டும் என தமிழ்நாடு அரசு பல எதிர்கால திட்ட வியூகத்துடன் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் போதையின் பாதையில் இளைஞர்கள் செல்லக்கூடாது என அறிவுறுத்தி வருகிறார். இதனிடையே, திமுக எம்.எல்.ஏ ஒருவர் கட்சி நிர்வாகிகளுக்கு பீருடன் விருந்து வைத்ததாக வீடியோ வெளியாகி புகார் எழுந்துள்ளது. இந்த விஷயம் குறித்து எம்.எல்.ஏ தரப்பும், தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகமும் எந்த தகவலையும் தற்போது வரை வெளியிடவில்லை.  பெற்றோர்களே கவனம் தேவை.. உணவு ஊட்டும் போது 3 வயது குழந்தை பரிதாப பலி..!

மதுவிருந்து வீடியோ வைரல்:

இதுதொடர்பாக வைரலாகி வரும் விடீயோவின் உண்மைத்தன்மை குறித்து விசாரிக்கப்படுகிறது. அதிமுக நிர்வாகிகளால் அதிகம் பகிரப்படும் வீடியோவில், ரிஷிவந்தியம் தொகுதியின் திமுக எம்.எல்.ஏ வசந்தம் க. கார்த்திகேயன் சார்பில் நடைபெற்ற மாவட்ட கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர், பீருடன் தடபுடல் விருந்து நடந்ததாக கூறப்பட்டுள்ளது. அந்த விடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதுதொடர்பாக தற்போது வரை எம்.எல்.ஏ தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. கட்சி நிர்வாகிகளே பதிவு செய்ததுபோல வீடியோ இடம்பெற்றுள்ளது.

வசந்தம் கார்த்திகேயன் மதுவிருந்து வைத்ததாக வைரலாகும் வீடியோ:

கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றதாக எம்.எல்.ஏ வெளியிட்ட வீடியோ:

(The above story first appeared on LatestLY on Apr 29, 2025 08:14 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).