ஏப்ரல் 19, ஹுப்பள்ளி (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹுபலி மாவட்டம், தார்வாட் நகராட்சியில் கவுன்சிலராக இருப்பவர் நிரஞ்சன் ஹிரேமத். இவர் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஆவார். இவரின் மனைவி கீதா. இந்த தம்பதிகளுக்கு நேஹா ஹிரேமத் (வயது 23) என்ற மகள் (College Girl ) இருக்கிறார். இவர் ஹூப்ளி பகுதியில் செயல்பட்டு வரும் பிவிபி கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்பிஏ பயின்று வருகிறார்.

இளைஞனின் ஒருதலைக்காதல்: கல்லூரியில் மாணவி நேஹா ஹிரேமத்துடன் முகம்மது பயாஸ் என்ற மாணவர் பயின்று வந்துள்ளார். இவர் நேஹாவை ஒருதலையாக காதலித்து, தனது காதலை ஏற்றுக்கொள்ளக்கூறி வற்புறுத்தி வந்ததாகவும் தெரியவருகிறது. காதல் விஷயத்தில் பிடிகொடுக்காத நேஹா, தான் காதல் வயப்படவில்லை என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார். ஆனால், எந்த பலனும் இல்லை. India Delivered BrahMos Supersonic Missile to Philippines: பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வழங்கிய இந்தியா.! 

Huballi Girl Neha Murder Case CCTV Visuals (Photo Credit: @AdityaRajKaul X)

கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை: முகம்மது பயாஸ் தொடர்ந்து தனது காதலை கூறி வற்பறுத்த, நேஹா அதனை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்து இருக்கிறார். இந்நிலையில், நேற்று மாலை கல்லூரி நிறைவு பெற்றதும், 04:45 மணியளவில் நேஹா நடந்து வந்துகொண்டு இருந்தார். அவரை இடைமறித்த முகம்மது பயாஸ், தான் எடுத்து வந்த கத்தியால் நேஹாவை சரமாரியாக 7 முறை குத்தினார்.

குற்றவாளி கைது & விசாரணை: இந்த சம்பவத்தில் நேஹா நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த வித்யா நகர் காவல் துறையினர், நேஹாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பயாஸை ஒருமணிநேரத்தில் கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.