ஏப்ரல் 19, மணிலா (World News): கடந்த 2022ம் ஆண்டு இந்தியா பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு 375 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் பிரமோஸ் சூப்பர்சானிக் க்ரூயிஸ் ஏவுகணைகளை வழங்க ஒப்புக்கொண்டது. இதன்பேரில் இரண்டு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. Delhi Metro Liplock: டெல்லி மெட்ரோவில் எல்லைமீறி காதல் ஜோடிகள்; மெய்மறந்து ஆரத்தழுவி முத்தம்.!
இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்: இந்நிலையில், ஏப்ரல் 19, 2024 இன்று பிலிப்பைன்ஸ் நாட்டின் கடற்படை அதிகாரிகள் முன்னிலையில், பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணைகள் ஒப்படைக்கப்பட்டது. இந்திய இராணுவத்தினர் இனிப்புகளை வழங்கியதை தொடர்ந்து, இரண்டு நாட்டு அதிகாரிகளும் மகிழ்ச்சியில் திளைத்துப்போயினர். Actor Suriya Casted Vote: “மக்கள் வாக்களிப்பதற்கு முன் தங்கள் வேட்பாளர்களைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும்” குடும்பத்தோடு நின்று வாக்களித்த நடிகர் சூர்யாவின் கருத்து..!
சீர்மிகு இந்தியா: ஆசிய கண்டத்தில் மிகப்பெரிய பலம்பொருந்திய நாடாக உருவாகி, இந்திய பெருங்கடலில் தன்னை அரசனாக நிலைநிறுத்தி வரும் இந்தியா, அண்டை நாடுகளிடமும் நட்புறவை ஏற்படுத்தி அவர்களுக்கு தேவையான உதவியையும் செய்து வருகிறது. இதனால் ஆசிய கண்டத்தில் மட்டுமல்லாது உலகளவிலும் இந்தியாவின் மீதான மதிப்பு உயர்ந்துள்ளது.
பிலிப்பைன்ஸுக்கு பிரம்மோஸ் வழங்கிய இந்தியா:
#WATCH | BrahMos supersonic cruise Missiles delivered to the Philippines by India today. The two countries had signed a deal worth USD 375 million in 2022. pic.twitter.com/CLdoxiChb5
— ANI (@ANI) April 19, 2024
இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்த இந்திய வீரர்கள்:
#WATCH | Indian officials offering sweets to the Philippines Marine Corps officers on the delivery of the BrahMos missile to the Philippines under an export order of USD 375 million. pic.twitter.com/qzhLsMxOLu
— ANI (@ANI) April 19, 2024