MP Gang Rape: சமூக வலைத்தளத்தில் அறிமுகமான நண்பரால் 17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்: 4 பேர் கும்பலால் நடந்த கொடூரம்.!
தனக்கு சமூக வலைத்தளம் வழியே அறிமுகமான நண்பரின் அழைப்பை ஏற்று, அப்பாவித்தனமாக சென்ற 17 வயது சிறுமியை பலவந்தப்படுத்தி 3 பேர் கும்பல் சீரழித்த சோகம் நடந்துள்ளது.
நவம்பர் 28, குவாலியர் (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியர் மாவட்டம், பழைய சஷ்னி பகுதியில் 17 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு முகநூல் வழியே இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் ஓராண்டாக முகநூலில் பேசிப்பழகி வந்த நிலையில், கடந்த நவமபர் 21ம் தேதி இளைஞர் சிறுமியை நேரில் பார்க்க வேண்டும் என ஆசையாக பேசியுள்ளார்.
முகநூல் நண்பரின் அழைப்பை ஏற்ற பெண்மணியும், விபரீதம் புரியாமல் அவரை சந்திக்க சம்மதித்துள்ளார். காரில் வந்த இளைஞன், தன்னுடன் 3 நண்பர்களையும் உடன் அழைத்து வந்துள்ளார். IND Vs AUS T20I 3rd Match: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும், மூன்றாவது டி20 தொடர்: தொடரை வெல்லும் முனைப்பில் தீவிர பயிற்சியில் இந்திய அணி.!
இவர்கள் அனைவரும் அங்குள்ள வனப்பகுதியில் சென்று காரை நிறுத்த, அங்கு சிறுமி நால்வர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். சிறுமியை சீரழித்த கும்பல், இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்திடுவதாகவும் மிரட்டி அனுப்பி வைத்துள்ளனர்.
இதனால் பயந்துபோன சிறுமி யாரிடமும் நடந்ததை கூறாமல் இருந்துள்ளார். பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியின் நடவடிக்கை கடந்த 4 நாட்களாக மாறியுள்ளது. பெற்றோரும் அதனை கவனித்து இருக்கின்றனர்.
இதனையடுத்து, 4 நாட்கள் கழித்து மகளிடம் விசாரித்தபோது அதிர்ச்சிதரும் தகவல் நேற்று முன்தினம் தெரியவந்துள்ளது. உண்மையை அறிந்து பதறிப்போன பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் இந்திய அரசியலமைப்பு சட்டம் போக்ஸோ, எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டம், 376 பாலியல் பலாத்காரம், 377 இயற்கைக்கு மாறான நடவடிக்கை உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Nov 28, 2023 08:02 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

