IND Vs AUS T20I 3rd Match: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும், மூன்றாவது டி20 தொடர்: தொடரை வெல்லும் முனைப்பில் தீவிர பயிற்சியில் இந்திய அணி.!
நவம்பர் 28ம் தேதியான இன்று, இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கான 20 ஓவர்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் ஆட்டம் நடைபெறுகிறது.
நவம்பர் 28, அசாம் (Sports News): 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் இந்தியா - ஆஸ்திரேலியா (T20I Series India Vs Australia) அணிகள் மோதிக்கொள்ளும் இரண்டு ஆட்டங்கள் நிறைவுபெற்றுள்ளன. இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி அடைந்துள்ளது.
நவம்பர் 28ம் தேதியான இன்று, இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கான 20 ஓவர்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர், அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் இருக்கும் பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. Earthquake Today: நியூ கினியா, சீனா, பாகிஸ்தான் நாடுகளில் அதிகாலையில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்.!
இந்த ஆட்டத்தை இந்திய கிரிக்கெட் அணி சூரியகுமார் யாதவின் தலைமையில் எதிர்கொள்கிறது. கடந்த இரண்டு போட்டிகளிலும் வென்று, தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி விளையாடி வருகிறது.
இன்றைய ஆட்டத்தினை ஜியோ சினிமா செயலி, ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி ஆகியவற்றில் நேரலையில் கண்டுமகிழலாம். இன்று இரவு இந்திய நேரப்படி, 06:30க்கு டாஸ் போடப்பட்டு 07:00 மணியளவில் ஆட்டம் தொடங்கும்.
இந்தியா 5ல் 2 போட்டிகளில் வெற்றிபெற்று 2 - 0 கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. முன்னதாக 2023 உலகக்கோப்பை தொடரை இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
(The above story first appeared on LatestLY on Nov 28, 2023 07:32 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

