ஜனவரி 01, சிங்ரௌலி (Madhya Pradesh News): மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிங்ரௌலி மாவட்டத்தில் வசித்து வரும் 19 வயது இளம்பெண், கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்ளூரில் நடைபெற்ற கண்காட்சிக்கு ஆண் நண்பருடன் சென்றுள்ளார். பின் அவர் இரவு 07:30 மணியளவில் வீட்டிற்கு வந்துகொண்டு இருந்த நிலையில், இவர்களை 6 பேர் கொண்ட கும்பல் குறுக்கிட்டு இருக்கிறது.
6 பேர் கும்பலால் பலாத்காரம்:
இவர்கள் இருவரையும் தாக்கி அங்குள்ள வனப்பகுதிக்கு தூக்கிச் சென்றவர்கள், ஆண் நண்பரை கடுமையாக தாக்கி மரத்தில் கட்டிபோட்டுள்ளனர். பின் அவரின் முன்னிலையிலேயே 19 வயது இளம்பெண்ணை 6 பேர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. வெளியே சென்ற மகள் வீட்டிற்கு வரவில்லையே என பெற்றோர், உறவினர்களும் பதறிப்போயினர். Hangover Man Atrocity: புத்தாண்டுக்கு புல்லா குடி..போதை ஆசாமி அட்ராசிட்டி.. என்ன பாஸ் இதெல்லாம்?
காவல் நிலையத்தில் புகார்:
அவரை பல இடங்களிலும் தேடி அலைந்த நிலையில், மறுநாள் காலை 05:30 மணியளவில் பாதிக்கப்பட்ட இளம்பெண் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனக்கு நேர்ந்த துயரம் குறித்து அவர் பெற்றோரிடம் கூறவே, உடனடியாக ஜியவான் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் கைது:
புகாரை ஏற்ற காவல்துறையினர் பெண்கள் பாதுகாப்பு, போக்ஸோ உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, குற்றச்செயலில் ஈடுபட்ட 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேற்படி விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.