Drunken Man in AP (Photo Credit: @TeluguScribe X)

ஜனவரி 01, பார்வதிபுரம் மான்யம் (Andhra Pradesh News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பார்வதிபுரம் மான்யம் (Parvathipuram Manyam) மாவட்டம், பால்கொண்டா மண்டலம், எம்.சிங்கிபுரம் கிராமத்தில் வசித்து வருபவர், மதுபோதைக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. எப்போதும் போதையில் திரிபவர், நேற்று புத்தாண்டை (New Year 2025) முன்னிட்டும் மதுபானம் அருந்தி இருக்கிறார். போதையில் தள்ளாடியபடி வந்தவர், அங்கிருந்த வீட்டின் அருகில் இருக்கும் மின்கம்பத்தில் சாய்ந்து நின்றார். பின் சற்றும் எதிர்பாராத வேளையில், அவர் திடீரென மின்கம்பத்தின் மீது ஏறி இருக்கிறார். New Year 2025 Sunrise: 2025 புத்தாண்டில் முதல் சூரிய உதயம்.. அசத்தல் வீடியோ கிளிப்ஸ் இதோ.! 

மின்கம்பியில் படுத்துக்கொண்டார்:

இதனைக்கண்டு அதிர்ந்துபோன உள்ளூர் மக்கள் அவரை கீழே இறங்க வற்புறுத்தி இருக்கின்றனர். போதை ஆசாமி கீழே இறங்காமல் மேலே ஏறியதால், விரைந்து சென்று ஊருக்கு மின்சாரம் வழங்கும் மின்மாற்றியில் இருந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் குடிபோதை ஆசாமி மரணத்தில் இருந்து தப்பினாலும், போதையில் செய்வதறியாது நடந்துகொண்ட ஆசாமி, மின்கம்பியில் ஏறி ஓய்யாரமாக படுத்துக்கொண்டார். இதனால் அதிருப்தியடைந்த மக்கள் காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஒவ்வொரு ஊரிலும் போதையால் தொடரும் இடையூறு:

அதிகாரிகள் வருவதற்குள் மக்களும் மீட்பு பணிகளில் களமிறங்கிய நிலையில், போதை ஆசாமியை பத்திரமாக கீழே இறக்கி காவல்துறையினர் வசம் ஒப்படைத்தனர். இதனையடுத்து, போதை ஆசாமியை காவல்நிலையம் அழைத்துச் சென்ற அதிகாரிகள், அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஊர் ஊருக்கு போதை ஆசாமிகள் செய்யும் செயல்கள் அவ்வப்போது எல்லைமீறி செல்லும் வகையிலும், மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலும் அமைகின்றன.

மின்கம்பிகளின் மீது ஏறி படுத்துக்கொண்ட போதை ஆசாமி: