Girl Brutally Killed by Boyfriend: 20 வயது காதலியை சரமாரியாக குத்திக்கொன்ற காதலன்; நள்ளிரவில் படுபயங்கரம்.!

காதலியை கொலை செய்த இளைஞன், உடலை அங்குள்ள இரயில் நிலையத்திற்கு அருகில் விட்டுச்சென்ற சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Girl Brutally Killed by Boyfriend: 20 வயது காதலியை சரமாரியாக குத்திக்கொன்ற காதலன்; நள்ளிரவில் படுபயங்கரம்.!
Crime Scene File Pic (Photo Credit: Pixabay)

ஜூலை 28, நவி மும்பை (Mumbai News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவி மும்பை, ஊரான் இரயில் நிலையத்தின் மறைவிடப்பகுதியில் 20 வயது இளம்பெண்ணின் சடலம் கிடப்பதாக இன்று athikalai 2 மணியளவில் காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். Local Train Stunt Goes Wrong: இரயில் பயணத்தில் ஸ்டண்ட் வேண்டாம் ப்ரண்ட்ஸ்; கை-கால்களை இழந்தபின் அறிவுரை.! 

5 தனிப்படைகள் அமைத்து விசாரணை:

பின் இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், சிறுமி சரமாரியாக குத்தி படுகொலை செய்யப்பட்டது உறுதியானது. அவர் ஊரான் பகுதியை சேர்ந்த யஷாஸ்ரீ ஷிண்டே என அடையாளம் காணப்பட்டார். இவர் பெலாப்பூர் பகுதியில் வேலை பார்த்து வந்துள்ளார். ஊரானில் இருந்து பெலாப்பூர் 25 கி.மீ தொலைவில் உள்ளது. சம்பவத்தன்று காதல் விவகாரத்தில் பெண்ணின் காதலரான இளைஞர் கொடுரமாக தனது காதலியை கொலை செய்து உடலை ஊரான் இரயில் நிலைய பகுதியில் வீசி சென்றது அம்பலமானது. இதனையடுத்து, தலைமறைவான நபருக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர். இதுதொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).