Mumbai Local Train Stunt Goes Wrong (Photo Credit: @mumbaimatterz / @Central_Railway X)

ஜூலை 28, மும்பை (Mumbai News): சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற பெருநகரங்களில், மக்களின் வசதிக்காக விரைந்த பயணங்களின் வசதிக்காக புறநகர் மின்சார இரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த ரயில்களில் பயணம் செய்யும்போது, பயணிகளின் வசதிக்காக கதவுகள் எப்போதும் திறந்த நிலையிலேயே இருக்கும். மெட்ரோ போன்ற இரயில் பயணத்தில் அதன் கதவுகள் மூடப்பட்ட பின்புதான் இரயில் இயங்கும்.

படிக்கட்டு பயணம் ஆபத்து தரும்:

இவ்வாறான விஷயங்களை தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொள்ளும் இளைஞர்கள் மற்றும் சிறார் கும்பல், ரயில்களில் பயணம் செய்யும்போது கதவுகளில் தொங்கியபடி, கம்பிகளை பிடித்தவாறு சாகசம் செய்து ஆபத்தான பயணங்களை மேற்கொள்வதை தொடர்ச்சியாக வைத்துள்ளனர். இதனால் ஏற்படும் விபரீதம் உயிரையும் பறிக்கலாம் என காவல்துறையினர் எச்சரித்து, இச்செயல்களை கண்காணித்து, தொடர்ந்து இவ்வாறான விஷயங்களில் ஈடுபடுவோரை கைது செய்து கண்டித்து அனுப்புவதையும் தொடர்ந்து செய்து வருகின்றனர். Two People Died: ரயில் படிக்கட்டில் பயணித்த 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு..!

சாகசத்தை தொடர்ந்ததால் விபரீதம்:

இந்நிலையில், மும்பை புறநகர் இரயிலில் பயணம் செய்யும் சிறுவன் ஒருவன் சாகசம் செய்த வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. சிறுவனை கண்டறிந்த இரயில்வே காவல்துறையினர், அவரை கண்டிப்புடன் எச்சரித்து அனுப்பி இருந்தனர். அதிகாரிகளின் அறிவுரையை கேட்காத சிறுவன், தொடர்ந்து இரயில் பயணத்தில் சாகசம் செய்வதை தொடர்ச்சியாக வைத்து இருக்கிறார்.

கை-கால்களை இழந்தபின் சிறுவன் அறிவுரை:

இதனிடையே, அப்படி ஒருநாள் சாகசம் செய்யும்போது நிலைதடுமாறி கீழே விழுந்தவர், இரயில் சக்கரத்தில் சிக்கி தனது கை-கால்களை இழந்தார். சிறுவன் வீடியோ வாயிலாக அடையாளம் காணப்பட்டு, இரயில்வே அதிகாரிகள் வீட்டிற்கு சென்றபோதுதான் சிறுவனுக்கு நேர்ந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனையடுத்து, சிறுவன் தனைப்போன்ற இளம் வயதினருக்கு இரயில் பயணத்தில் சாகசம் வேண்டாம் என்ற கோரிக்கையையும் முன்வைத்து இருக்கிறார்.

ஸ்டண்ட் வீடியோ:

கை-கால் இழந்ததும் அறிவுரை கூறும் வீடியோ: