Sexual Harassment File Pic (Photo Credit: Pixabay)

ஜூலை 10, புனே (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனேவில் வசித்து வருபவர் ஆனந்த் கட்டே (வயது 23). இவர் சமூக ஊடகம் மூலமாக 28 வயதான டாக்டருடன் பழகி வந்துள்ளார். இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், பெண் மருத்துவரை சதாராவில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு ஆனந்த் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்து பலத்காரமும் செய்துள்ளார். மேலும் அதனை வீடியோ எடுத்து வைத்து மருத்துவரை அடிக்கடி மிரட்டி தனது ஆசைக்கு இணங்குமாறு தெரிவித்துள்ளார். Chennai News: உல்லாச அழகிகளுக்காக தரகரை கடத்திய தனியார் கல்லூரி மாணவர்கள்.! 

வீடியோ வெளியிடுவதாக மிரட்டல் :

இதனால் அதிர்ந்து போன மருத்துவர் ஆனந்துக்கு மறுப்பு தெரிவித்த நிலையில், சமூக ஊடகத்தில் வீடியோவை வெளியிட்டு விடுவதாக கூறியதால் என்ன செய்வது? என்று தெரியாமல் திகைத்துள்ளார். இதனிடையே ஆனந்த் அந்த வீடியோவை சமூக ஊடகத்தில் பதிவேற்றியதாக கூறப்படும் நிலையில், பெண் மருத்துவர் உடனடியாக காவல்துறையினரை அணுகி ஆனந்த் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆனந்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:

சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3