ஜூலை 10, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் தினேஷ்குமார், வசந்தகுமார், அப்சர் அலி. இவர்கள் மூவரும் கடந்த சனிக்கிழமை அன்று புதுச்சேரிக்கு உல்லாச சுற்றலா சென்று இருக்கின்றனர். அப்போது உல்லாச சுற்றுலாவை அழகிகளுடன் கொண்டாட திட்டமிட்டவர்கள், ஆன்லைன் மூலமாக ரூ.1.5 லட்சம் பணம் அனுப்பி நான்கு விபச்சார அழகிகளை தங்களுடன் வந்து மகிழ்ச்சியாக பொழுதுகளைக் கழிக்க புக்கிங் செய்துள்ளனர். அப்போது பணத்தை பெற்றுக்கொண்ட தரகர் அழகிகளை அனுப்பி வைக்கவில்லை என கூறப்படுகிறது. JustIN: மாணவிகளின் ஆடைகளை கழற்றி நிர்வாணப்படுத்தி மாதவிடாய் சோதனை.. அவலத்தின் உச்சம்.!
3 மாணவர்களின் பகீர் செயல் :
இதனால் ஆவேசமடைந்த கல்லூரி மாணவர்கள் எழும்பூரில் வசித்துவரும் தரகரிடம் நேரில் சென்று ஒன்று அழகிகளை அனுப்பி வைக்கவேண்டும் அல்லது எங்கள் பணத்தை திரும்பதர வேண்டும் என்று தகராறு செய்துள்ளனர். அப்போது நடந்த மோதலில் மாணவர்கள் 3 பேர் தரகரை தாக்கிய நிலையில், அவரை காரில் கடத்திச் சென்று விட்டதாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து எழும்பூர் காவல்துறையினர் தலைமையில் தனிப்படை அமைத்து தரகரை மீட்டனர். மேலும் மாணவர்கள் கைது செய்யப்பட்டு இந்த விஷயம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.