Pondicherry Missing Girl: மாயமான 9 வயது சிறுமி சடலமாக மீட்பு; கஞ்சா குடிக்கி கும்பலால் நடந்த பயங்கரம்.. அதிரவைக்கும் சம்பவம்.!

கஞ்சா போன்ற போதை வஸ்துக்களுக்கு அடிமையாகும் இளம் தலைமுறையும், புத்தி கூறவேண்டிய முதிய தலைமுறையும் சேர்ந்து சிறுமியை போதையில் சீரழித்து கொலை செய்த பயங்கரம் நெஞ்சை பதறவைத்துள்ளது.

Pondicherry Missing Girl: மாயமான 9 வயது சிறுமி சடலமாக மீட்பு; கஞ்சா குடிக்கி கும்பலால் நடந்த பயங்கரம்.. அதிரவைக்கும் சம்பவம்.!
Pondicherry 9 Aged Girl Rape & Murder Case (Photo Credit: @Hereprak / Pixabay)

மார்ச் 06, முத்தியால்பேட்டை (Pondicherry News): புதுச்சேரி மாநிலத்தில் உள்ள முத்தியால்பேட்டை, சோலை நகர் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 9 வயதுடைய மகள் இருக்கிறார். இந்த சிறுமி அங்குள்ள அரசுப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த 02ம் தேதி மதியம் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி (Muthialpet Missing Girl Rape Murder) மயமாகினார். வீட்டின் வெளியே விளையாடிய மகளை காணாது பதறிப்போன பெற்றோர், தங்களது உறவினர்களின் உதவியுடன் அவரை பல இடங்களில் தேடி இருக்கின்றனர்.

வீடுவீடாக நடந்த சோதனை: சிறுமி குறித்த விபரம் ஏதும் தெரியாத காரணத்தால், முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை ஏற்ற காவல் துறையினர் உடனடியாக வழக்குப்பதிந்து விசாரணையை முன்னெடுத்தனர். மேலும், சிறுமியின் வீட்டருகே இருக்கும் சிசிடிவி கேமிராவும் ஆய்வு செய்யப்பட்டன. அதில் சிறுமி தனியே நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகவே, வீடுவீடாக சோதனை நடந்தது. சந்தேகத்தின் பேரிலும் சிலரை விசாரணை வளையத்தில் அதிகாரிகள் வைத்திருந்தனர். Gurugram Cafe Case: மவுத் ஃப்ரெஷனரை சாப்பிட்டதால் ஏற்பட்ட விபரீதம்.. 5 பேருக்கு ரத்த வாந்தி..! 

உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைப்பு: சிறுமி நிலை கேள்விக்குறியானதால் பதற்றமடைந்த உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காவல் துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனிடையே, சிறுமியின் சடலம் நேற்று சோலைநகர் அம்பேத்கர் வீதி - கண்ணதாசன் வீதி இடையே இருக்கும் கழிவுநீர் கால்வாயில் சாக்குமூட்டையில் கிடந்தது. தகவல் அறிந்த அதிகாரிகள் சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், நிகழ்விடத்திற்கு விரைந்த சிறுமியின் தந்தையும் தனது மகள் என்பதை உறுதி செய்தார்.

Sexual Harassment / Rape File Pic (Photo Credit: Pixabay)

6 பேர் கும்பல் கைது: சிறுமியின் கை-கால்கள் வேட்டி துணிகொண்டு கட்டப்பட்டு இருந்ததால், பதறிப்போன உறவினர்கள் மீண்டும் போராட்டத்தில் களமிறங்கினர். உடலை காவலர்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்ப விடாமல் தள்ளுமுள்ளு நடந்தது. பின் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், முதியவர் மற்றும் 3 சிறார்கள் என 4 பேர் விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டனர். இவ்விவகாரத்தில் தற்போது வரை கருணாஸ் (19), விவேகானந்தன் (59) உட்பட 4 சிறார்கள் என 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதை வெறியில் பயங்கரம்: கஞ்சா மற்றும் மதுபோதைக்கு அடிமையான இவர்கள், சம்பவத்தன்று தனியே நடந்து வந்த சிறுமியை தங்களுடன் அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ஒருகட்டத்தில் சிறுமி மயங்கியதால், அவர் உயிரிழந்துவிட்டதாக எண்ணி கொலை செய்து உடலை கால்வாயில் வீசிவந்துள்ளனர். விசாரணைக்கு பின்னர் இத்தகவல் உறுதி செய்யப்படவே, அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் நிலவும் பதற்றம் காரணமாக துணை இராணுவம் உட்பட பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

(The above story first appeared on LatestLY on Mar 06, 2024 08:25 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).